அப்பாவையும் தாத்தாவையும் திருமணம் செய்த எகிப்து ராணி: ரகசியம் வெளிவருமா?

0

Tutankhamun என்னும் எகிப்திய மன்னனின் இளம் மனைவியாகிய Ankhesenamun புதைக்கப்பட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது அப்பாவையும் தாத்தாவையும் மணந்ததாகக் கூறப்படும் எகிப்திய ராணியாகிய Ankhesenamun புதைக்கப்பட்ட இடத்தை புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக தேடிவந்த நிலையில் அவள் புதைக்கப்பட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று இந்த அகழ்வாராய்ச்சிக்கு பொருளுதவி செய்து வருவதால் அதன் வெளியீட்டு உரிமைகளையும் அந்த தொலைக்காட்சியே வாங்கியுள்ளது.

ஜனவரி மாதம் 100 எகிப்தியப் பணியாளர்கள் எகிப்தின் ராஜாக்களின் பள்ளத்தாக்கு எனப்படும் பகுதியின் இதுவரை ஆராயப்படாத மேற்குப்பகுதியில் Ankhesenamunஇன் கல்லறையைத் தேடும் பணியில் இறங்கினார்கள்.

ராஜ கல்லறை என்று ரேடார்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு இடத்தை புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டுவதைக் காட்டும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இந்த ஆராய்ச்சிக்கு பொருளுதவி செய்யும் அந்த பிரபல தொலைக்காட்சி தங்களது கண்டுபிடிப்புகளை இந்த ஆண்டின் கடைசியில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளதைப் பார்க்கும்போது பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

யார் இந்த Ankhesenamun?
எகிப்திய மன்னரான பார்வோன் Akhenatenக்கும் அவரது மனைவி Nefertitiக்கும் பிறந்தவர் Ankhesenamun.

அவர்களது கலாச்சாரப்படி சகோதரர்களுக்குள் திருமணம் செய்வது சகஜம் என்பதால், Akhenaten தனது தங்கையாகிய Nefertitiயை மணந்து கொண்டார்.

கி.மு.1332 முதல் 1327 வரை எகிப்தை ஆண்ட Tutankhamunஇன் மனைவிதான் இந்த Ankhesenamun.

கணவர் திடீரென்று இறந்துபோக Ay என்பவரை மணந்துகொண்டார் Ankhesenamun. சில ஆவணங்கள் அவர் தனது கணவர் இறந்ததும் தனது தாத்தாவை மணந்துகொண்டார் என்றும் வேறு சில அவர் தனது தந்தையையே மணந்து கொண்டார் என்றும் கூறுகின்றன.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபாடும் போது எழுந்து நிற்காததால் கர்ப்பிணியாக இருந்த பிரபல பாடகி சுட்டுக் கொலை!!
Next articleஇன்றைய ராசிபலன் 13.4.2018