Home thatstamil one india tamil oneindia tamil மலையாள நடிகர்களைவிட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம்: கேரள எம்எல்ஏ கருத்து!

மலையாள நடிகர்களைவிட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம்: கேரள எம்எல்ஏ கருத்து!

0
837

கேரளாவில் மலையாள நடிகர்களைவிட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்று அம்மாநில காங்கிரஸ் எம் எல் ஏ.பி.சி. ஜார்ஜ் தெரவித்துள்ளது சமூக வலைதளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளவில் மலையாள நடிகர்களுக்கு இணையான வரவேற்பு விஜய் படங்களுக்கும் உண்டு. சர்கார் படத்தின் போதுகூட இந்திய நடிகர்களிலேயே உயரமாக, விஜய்க்கு 175 உயரத்தில் கட் அவுட்டை கேரளாவில் உள்ள கொல்லம் நண்பன்ஸ் அமைப்பினர் வைத்தனர்.

மேலும் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர் மன்றங்கள் மூலம், விஜய் படம் வெளிவரும்போதெல்லாம் தொண்டு நிறுவனங்களுக்கு உதவுதல், கட் அவுட்களில் புதுவிதமான அணுகுமுறைகளைச் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து பிறமொழி நடிகர் ஒருவருக்கு கேரளாவில் அதிகமான வரவேற்பு இருப்பதை கேரள திரையுலகினர் ப்லரும் அவ்வப்போது தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியும் வருகின்றனர்.

இதற்கு முன்னர்கூட மோகன்லால் நடித்த ஒடியான் படத்தின் இயக்குனர் ஷிரிக்குமார் விஜய் படத்தின் வசூலை மட்டும் இங்கு கொண்டாடுகிறார்கள் என்று விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் கேரளாவில், கைரலி தொலைக்காட்சியில் லவுட் ஸ்பீகர் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான ஹல்பி பிரான்சிஸ் கேரளாவில், மலையாள நடிகர்களைவிட, தமிழ் நாட்டு நடிகர் விஜய்க்கு இருக்கும் வரவேற்பு குறித்து வருத்தத்துடன் விமர்சித்தார்.

இதற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்எல்ஏ பிசி ஜார்ஜ் , ”மலையாள நடிகர்களைவிட விஜய்க்கு கேரளாவில் கூடுதலான ரசிகர்கள் உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் திரையரங்குகள் முன் கூடி விஜய் கட்- அவுட்டுகளுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்கின்றனர். ” என்று தெரிவித்தார்.

தற்போது இவரது கருத்துக்கு, மலையாள முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Previous articleமாற்றுத்திறனாளி தற்கொலைக்கு உரிமை கோரும் முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி போலீஸார்!
Next article36 ஆயிரம் ரூபாய் செலவில் மகனின் திருமணத்தை நடத்திய ஐஏஎஸ் அதிகாரி!