36 ஆயிரம் ரூபாய் செலவில் மகனின் திருமணத்தை நடத்திய ஐஏஎஸ் அதிகாரி!

0

லட்சங்களிலும் கோடிகளிலும் திருமணம் நடக்கும் இந்தக் காலத்தில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது மகனின் கல்யாணத்தை 36 ஆயிரம் ரூபாயில் நடத்தி முடித்துள்ளார்.

விசாகப்பட்டினம் மெட்ரோபாலிட்டன் மேம்பாட்டு ஆணையரான பசந்த் குமார், தன்னுடைய மகனின் கல்யாணத்தை 36 ஆயிரம் ரூபாயில் நடத்தி முடித்துள்ளார். இதில் மாப்பிள்ளை வீட்டாரின் செலவு ரூ.18,000. பெண் வீட்டாரின் செலவு ரூ.18,000.

ஓராண்டுக்கு முன்னதாகத் தனது மகளின் திருமணத்தையும் ரூ.16,100 தொகையில் எளிமையாக நடத்தியுள்ளார் பசந்த் குமார்.

பரம குரு பிரேம் சரண் சத்சங்கி தலைமையில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் தெலங்கானா ஆளுநர் நரசிம்மனும், அவரின் மனைவி விமலாவும் கலந்துகொண்டனர். நரசிம்மனிடன் இணைச் செயலாளராக 8 ஆண்டுகள் பணியாற்றியவர் பசந்த் குமார்.

திருமண ஏற்பாடுகள் குறித்துக் கேட்டதற்கு, ”திருமணப் பத்திரிகைக்கு 5 ரூபாய்க்கும் குறைவாக செலவானது. 100 பத்திரிகைகள் மட்டுமே அச்சடிக்கப்பட்டன. பெண் வீட்டாருக்கு 65 பத்திரிகைகளும் எங்களுக்கு 35 பத்திரிகைகளும் தேவைப்பட்டன.

விருந்தினர்களுக்கு வழங்கும் சிற்றுண்டியும் இனிப்பும் தலைக்கு 8 ரூபாய் ஆனது. வரவேற்பின்போது 20 ரூபாய் செலவில் உணவு வழங்கப்பட்டது” என்றார் பசந்த் குமார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமலையாள நடிகர்களைவிட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம்: கேரள எம்எல்ஏ கருத்து!
Next articleஆபாச ‘டிக்டாக்’ மோகம்! உஷார் பெண்களே!