முடி நன்கு வேகமாக வளர இந்த முறையை பயன்படுத்தி பாருங்க!

0

முடியின் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் அதிகரிக்க சிறந்த வழியெனில், அது வாரம் ஒருமுறை தவறாமல் சூடான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து, நன்கு ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் அடர்த்தி மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.

முட்டையின் வெள்ளைக்கருவிற்கு பாதிப்படைந்த மயிர்கால்களை சரிசெய்யும் குணம் உள்ளது. அதுமட்டுமின்றி, முடியை மென்மையாகவும், பொலிவோடும் வெளிக்காட்டும். ஆகவே வாரம் ஒருமுறை முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு முடியை நன்கு மசாஜ் செய்து உலர வைத்து குளிக்க வேண்டும். இதனால் முடி நன்கு வேகமாக வளரும்.

சீப்புகளைக் கொண்டு தலையை சீவும் போது, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும். தலைக்கு குளித்த பின்னர், முடியை உலர வைக்க பலர் ஹேர் ட்ரையரைப் பயன்படுத்துவார்கள். இப்படி பயன்படுத்துவதால், முடியின் ஆரோக்கியமானது பாதிக்கப்படும்.

முடிக்கு புரோட்டீன் மிகவும் அவசியமானது. அத்தகைய புரோட்டீன் முட்டையில் மட்டுமின்றி, உருளைக்கிழங்கிலும் உள்ளது. அதற்கு உருளைக்கிழங்கை வேக வைத்த தண்ணீரைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை அலசுங்கள். இதனால் அதில் உள்ள இயற்கையான ஸ்டார்ச் முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

வெங்காயத்தை நீரில் போட்டு வேக வைத்து, பின் அந்த நீரினால் முடியை அலசலாம் அல்லது வெங்காயத்தை சாறு எடுத்து அதனைக் கொண்டும் முடியை மசாஜ் செய்து ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலசலாம். இதன் மூலம் முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.

மாதம் ஒருமுறை ஒரு டம்ளர் பீரைக் கொண்டு, ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து வந்தால், மயிர்கால்கள் வலிமையடைந்து, முடி நன்கு அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.

வினிகர் கூட ஒரு அற்புதமான கூந்தல் பராமரிப்பு பொருள். அதற்கு வினிகரை நீரில் கலந்து, பின் அந்த கலவையைக் கொண்டு ஸ்கால்ப் மற்றும் முடியை அலசினால், முடியானது பொலிவோடும், மென்மையாகவும் இருக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅனுராதபுரம்‍‍‍‍‍_ ‍‍‍‍‍தத்தெடுத்து வளர்த்த மகளை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!
Next articleஉருளைக் கிழங்கை அதிக அளவு உணவில் எடுத்துக் கொள்வது நல்லதா?