உருளைக் கிழங்கை அதிக அளவு உணவில் எடுத்துக் கொள்வது நல்லதா?

0

நமது தினசரி உணவில் ஏதாவது ஒரு வடிவத்தில் இந்த உருளை கிழங்கை நம்மால் பார்க்க முடியும்.
100 கிராம் உருளைக்கிழங்கில் 75 கலோரிகள் உள்ளது. இந்த உருளைக் கிழங்கில் உள்ள கலோரியானது 1 கப் ஆரஞ்சு சாறை விட குறைவானது. அது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்குவதோடு, உடலில் உள்ள அதிகப்படியான டாக்ஸின்கள் மற்றும் கெட்டக் கொழுப்புகளை அகற்றுகிறது.

உருளை சத்து மிகுந்தது. இதில் வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளது. உருளையை தோலுடன் உண்பதனால் நார்சத்து உடம்பில் சேருகிறது. மற்ற காய்கறியுடன் ஒப்பிடும்போது குறைவான கலோரிகளை உடைய சத்து மிகுந்தது. இதனை வறுத்து உண்பதைவிட வேகவைத்து உண்பதே நல்லது.

உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்புகாரர்களுக்கும் இது மிகவும் நல்லது. உருளையை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

சாப்பிட்டவுடன் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய உணவுப்பொருள் உருளைக்கிழங்கு. எளிதில் ஜீரணிக்கக் கூடியதும் என்பது இதன் சிறப்பம்சம்.

வயிற்றுக் கோளாறுகள் வயிற்றுப் புண்களையும் உருளை போக்கக் கூடியது, மலச்சிக்கலை மறையச் செய்வது. உருளைக்கிழங்கு உன்னதமான மருத்துவ குணங்களை உடையது எனினும் விடாமல் பல நாட்கள் உபயோகப்படுத்துவதால் உடல் வலியும் புத்தி வன்மையும் மந்தப்படும் என்பதை உணர்ந்து அளவோடு பயன்படுத்துதல் வேண்டும்.

உருளைக்கிழங்கில் உள்ள பைடோகெமிக்கல் புற்றுநோயை தடுக்கிறது. மேலும் புற்றுநோய் இருப்பவர்களுக்கு அதன் தாக்கம் அதிகமாகாமல் தடுக்கலாம். இதை தோலுடன் சேர்த்து சாப்பிடும்போது நோய் எதிர்ப்பு மண்டலம் பலமாகும். எனவே அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்கள் தோலுடன் உருளைக்கிழங்கை சாப்பிட்டால் நல்ல தீர்வு கிடைக்கும்.

உருளைக்கிழங்கு பச்சையாக இருந்தால், அதில் க்ளைக்கோ அல்கலாய்டு என்னும் விஷம் நிறைந்திருப்பதால், அதனை அளவோடு உட்கொள்வது நல்லது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமுடி நன்கு வேகமாக வளர இந்த முறையை பயன்படுத்தி பாருங்க!
Next articleபாடம் கற்பிக்க நெட்டிசன்கள் வெளியிட்ட காட்சி! சிவக்குமார் செய்த மோசமான செயல்!