73 வகையான நோய்களை பரப்பும் ரூபாய் நோட்டுக்கள்!

0

ரூபாய் நோட்டுகள் மூலம் 78 வகையான நோய்கள் தாக்குவதாக ஆய்வின் மூலம் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரூபாய் நோட்டுகளை மணி பர்சில் நிரப்பி வைத்து கொள்வதை பெரும்பாலானோர் விரும்புவது வழக்கம். முற்காலத்தில் பெண்கள் இடுப்பு பகுதியில் புடவையில் சுற்றி பணத்தை பாதுகாத்து வந்தனர். இதனால், பெரும்பாலான பெண்களுக்கு இடுப்பு பகுதியில் தோல் பாதிக்கப்பட்டு வெள்ளைத் தழும்புகள் ஏற்பட்டது.

தற்போது பெண்கள் பெரும்பாலனோர் நேரடியாக ஜாக்கெட்டுக்குள் பணத்தை வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் பெரும்பாலான பெண்களுக்கு மார்ப்பக புற்று நோய், இதய நோய் போன்ற பாதிப்புகள் வருவதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இதே போல், சட்டை மேல் பாக்கெட்டில் ரூபாய் நோட்டுகளை வைப்பதால் பெரும் பாலான ஆண்களுக்கு தோல் நோய் தாக்குவதாகவும், ரூபாய் நோட்டுகளில் உள்ள கிருமிகளை சுவாசிப்பதால் மாரடைப்பு போன்ற பல்வேறு வகையான நோய்கள் தாக்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, ஆண்களோ, பெண்களோ யாராக இருந்தாலும், ரூபாய் நோட்டுகளை மணிபர்ஸ் போன்றவற்றில் பாதுகாப் பது சிறந்தது என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கிறார்கள்.

ரூபாய் நோட்டுகளால் ஏற்படும் பாதிப்பு குறித்த தகவல்களை கண்டறிய பொது மக்கள் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளை சேகரிக்கப்பட்டன. இந்த நோட்டுகளை டெல்லியில் இயங்கி வ ரும் இன்ஸ்டியூட் ஆப் ஜெய நாமிக்ஸ் அண்ட் இன்ட்டிகிரேட்டிவ் பயாலஜி ஆய்வுக் கூட விஞ்ஞானிகள் ஆய்வு மேற் கொண்டனர். அதில் ரூபாய் நோட்டுகளில் பங்கர்ஸ்கள் அதிக அளவில் இருப்பதாகவும், இதனால், எலும்பு உருக்கி நோய் எனப்படும் டி.பி. மற்றும் அல்சர் போன்ற நோய்கள் தாக்கும் என்றும், மேலும், உடைகள் மற்றும் சோப்புகள், கம்ப்யூட்டர் ஆகியவற்றின் மூலம் பல்வேறு வகையான நோய்கள் மக்களை தாக்குவதாக தெரிவிக்கப்பட்டது.

அதே மையம் நடத்தியுள்ள ஆய்வில், மக்கள் தினமும் பயன்படுத்தும் 10, 20 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் மக்களிடம் புழக்கத்தில் இருப்பதன் மூலம் 78 வகையான தொற்று நோய்கள் பரவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகள் ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் கைமாறுவதால், நோய்கள் பரவுவதாகவும் ஆய்வில் தெரியவருகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமூன்று நாட்கள் தொடர்ந்து இந்த கீரையை சாப்பிட்டு வாருங்கள் குடலிலுள்ள புழுக்கள் போய்விடும்!
Next articleதோலில் இந்தமாதிரி வெண்புள்ளிகள் வந்தா அலட்சியம் வேண்டாம். அது இதுவாக்கூட இருக்கலாம்!