உயிருக்கு போராடும் 5 வயது சிறுவன்..! அம்மா நான் சாகப்போறேனா? கொரோனாவின் கொடூரத்தால் துடிக்கும்!

0
332

எந்த பாவமும் அவன் செய்யவில்லை, குற்றமும் அவனது இல்லை.பெற்றோரோ நான் இதை அனுதாபம் பெறுவதற்காக சொல்லவில்லை. தயவு செய்து உங்கள் குழந்தைகள் மீது கவனம் கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸின் ஆபத்தை மக்கள் உணராத வரை அதனை தடுப்பது கடினம் என வைத்தியர்கள் கூறி வரும் நிலையில் பிரித்தானியாவை சேர்ந்த 30 வயது பெண்ணான லாரன் மக்களுக்காக எச்சரிக்கை பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் எனது மகன் ஆல்பி குறும்புகள் நிறைந்த ஆரோக்கியமான குழந்தை. இவனை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.

அத்தனை இலகுவாக கவர்ந்துவிடுவான். ஒரு நாள் விளையாடிக் கொண்டிருந்த என் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அத்துடன் மன நலம் பாதிக்கப் பட்டவன் போல் நடந்துகொண்டான். வைத்தியசாலை எடுத்துச் சென்றோம். கொரோனா சென்றார்கள்…வாந்தி எடுக்க தொடங்கினான், உணவு சிறிதளவும் சாப்பிடாமல் விட்டான், என் மகன் தற்போது சிறு நீர் கூட கழிப்பதில்லை, எழுந்திருக்க அவனால் முடியவில்லை,

அடிக்கடி மூச்சுத் திணறலால் அவதி படுகிறான். என்னால் அவனை பார்க்க முடியவில்லை, அவனது உயிர் மீது எனக்கு பயம் வந்துவிட்டது. என் கண்முன் என் மகன் அவஸ்த்தை படுகிறான். அவன் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி “அம்மா நான் சாகப் போகிறேனா ” என்பதாகும். எந்த ஒரு தாய்க்கும் இந்த கொடூர நிலமை வரக் கூடாது. கொஞ்சம் கூட நோய் இன்றி ஆரோக்கியமான குழந்தையாக இருந்த மகன் மோசமான நிலையில் உயிருக்கு போராடுகிறான்,

எழுந்திருக்க அவனால் முடியவில்லை. அரசின் கட்டுப்பாடுகளை பின் பற்றுங்கள். என் நிலை உங்களுக்கு வந்திவிட கூடாது என பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: