42C தாண்டும் வெப்பம்! பிரித்தானியாவில் ஏற்படவுள்ள பேராபத்து! அனைத்தும் உருகும் ஆபத்து! மக்களுக்கு எச்சரிக்கை!

0

அண்மைக்காலமாக ஐரோப்பிய நாடுகளில் வழமையை விடவும் வெப்ப நிலை அதிகரித்துள்ளமையினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அடுத்து வரும் 48 மணித்தியாலங்களில் 42 பாகை செல்சியஸ் வெப்பம் பிரித்தானியாவை தாக்கும் ஆபத்துக்கள் உள்ளதாக அந்த நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரி்த்துள்ளது.

இதன் காரணமாக தார்வீதிகள் உருகிப் போகும் ஆபத்தினை எதிர்கொண்டுள்ளனர். இதன்போது சாரதிகள் அதிக அவதானத்தை செலுத்த வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்திற்கான அதிக வெப்பமான காலநிலை கொண்ட நாட்களாக எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் பிரித்தானியாவின் வெப்பநிலை 35 பாகை செல்ஸியசை கடந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாகனங்களின் எரிபொருள் தாங்கிகள் வெடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதனால் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பகல் நேரங்களில் வெப்பநிலை வீட்டிற்குள் வராத வண்ணம் ஜன்னல் கதவுகளை மூடி வைக்குமாறு பிரித்தானிய மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நிழல் உள்ள பக்கத்திலேயே ஜன்னல்களை திறக்க வேண்டும் என காலநிலை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அரைவாசி அளவு ஜன்னல்களை திறப்பது சரியாக இருக்கும் என கூறப்படுகின்றது.

மோசமான காலநிலையின் போது நைலோன் படுக்கைக்கு பதிலாக மெல்லிய பருத்தி போர்வைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் நித்திரைக்கு செல்வதற்கு முன்னர் குளிரான நீரில் குளிப்பது நன்மையாக இருக்கும் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் அறைகளை குளிர்ச்சியாகவே வைக்க வேண்டும் எனவும், அடர்த்தி அற்ற ஜன்னல் உறைகளை ஜன்னலுக்கு பயன்படுத்துமாறும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

வேலை செய்யும் இடங்களிலும் வெப்ப நிலை குறைவாக இருப்பதனை உறுதி செய்து கொள்ளுமாறு பொது மக்களிடம் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

மேலும் குழந்தைகள், வயோதிபர்கள் உட்பட அனைவரும் அதிகளவான குளிர் நீராகாரங்களை பருகுமாறும் பருத்தி ஆடைகளை அதிகலவில் அணியுமாறும் எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள 8 வயதான திருட்டு கும்பல்! யாழில் சம்பவம்!
Next articleஅதிர்ச்சியில் இறந்த கணவர்! கதறி அழுத மனைவி! வீட்டிற்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளினால் ந‌டந்த சம்பவம்!