41பேர் பலியாவதை தடுக்க நினைத்து தன் உயிரை தியாகம் செய்த விமான பணியாளர்கள்!

0

விபத்தில் சிக்கி தீயில் கருகிய நேரத்திலும் தங்கள் உயிரை கொடுத்து பயணிகளை காப்பாற்றிவிட்டு விமானப் பணியாளர்கள் சிலர் தங்கள் உயிரை விட்ட சம்பவம் நெஞ்சத்தை உருக வைத்துள்ளது.

மாஸ்கோவில் இருந்து முர்மான்ஸ்க் பகுதிக்கு சூப்பர் ஜெட் விமானம் 73 பயணிகள் மற்றும் 5 ஊழியர்களுடன் ஒன்று வந்தது. விமானம் புறப்பட்ட சில மணிநேரத்திலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அப்போது விமானத்தின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக மளமளவென தீ பிடித்து எரிந்தது. இதனால் பதற்றத்தில் குழந்தைகளும் பெண்களும் அனைவரும் விமானத்தில் அவசர வழியாக அலறியடித்துக் குதித்தனர். இதனால் கூட்ட நெரிசலில் 2 குழந்தைகள் மற்றும் 41 பேர் தீயில் கருகி பலியானார்கள். இந்த விபத்தில் பயங்கர தீ காயங்களுடன் 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அப்போது மின்னல் தாக்கியதால், விமானத்தின் தொடர்பு சாதனங்கள் செயலிழந்ததால் விமானம் தரையிறக்கப் பட்டதாக சொல்லப்படுகிறது.

விமான பணியாளர்கள் உதவி
இந்நிலையில், தீப்பிடித்த பகுதியிலிருந்த விமானப் பணிப்பெண்கள், விமான உதவியாளர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து பயணிகளைக் காப்பாற்றியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. விமானத்தின் பின் பகுதியிலிருந்த உதவியாளர் தீ பரவியதும் கூச்சலிட்டு அனைவரையும் வெளியில் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். தீ விபத்திலிருந்து பயணிகளைக் காப்பாற்றும் முயற்சியில் அவர் இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதே போல விமான பணிப்பெண், தீ பரவுவதைப் பார்த்து பயணிகளை முன்பக்கமாக இழுத்துத் தள்ளியுள்ளார். விபத்தில் சிக்கிய சிலரைக் காப்பாற்றும் முயற்சியில் அவர் தீயில் கருகி பரிதாபமாகப் பலியாகியுள்ளார். பயணிகளின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் இறந்துள்ள இவர்கள் இருவரது தியாகத்தைப் பாராட்டி தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகையில் செய்திகள் வெளியாகியுள்ளது.

View this post on Instagram

Пассажир, последним покинувший загоревшийся после приземления в Шереметьеве самолет "Аэрофлота", снял на видео работу спасателей и бортпроводников на месте трагедии. "После 12-го ряда почти никто не выжил", — признался Олег Молчанов, сам вместе с супругой сидевший в этом ряду. По его словам, большая часть людей погибла моментально. "МЧС приехало быстро, но даже если бы и медленно, спасать там было некого. Я сам не ожидал, что самолет горит, как пластиковый стаканчик. Моментально. Стекла в моем ряду расплавились ещё до остановки борта", — отметил выживший пассажир. #ВестиRu

A post shared by ВЕСТИ.ru | РОССИЯ 24 (@vesti24) on

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய்யின் தளபதி63 கெட்டப் கசிந்தது வீல் சேரில் இருக்கும் விஜய்!
Next articleஇந்த ஐந்து ராசிகளில் பிறந்தவர்களுடன் இருந்தால் நேரம் போவதே தெரியாதாம் !