2 நிமிஷம் லேட்டா வந்த நபருக்கு அடித்த பேரதிர்ஷ்டம்! உண்மையிலேயே அதிர்ஷ்டம்னா இதுதானா! வைரலாகும் புகைப்படம்!

0

அதிர்ஷ்டம் உங்களை சரியான நேரத்தில் அடிக்கும் என்ற கூற்று ஒன்று உண்டு.ஆனால் அந்த கூற்று சில நேரங்களில் உண்மையாக நடப்பதும் உண்டு.

காரணம்,இரண்டு நிமிடம் தாமதமாக வந்ததால், எத்தியோப்பிய விமான விபத்தில் இருந்து தப்பியுள்ளார் பயணி ஒருவர்.

எத்தியோப்பிய ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான போயிங் 737 என்ற விமானம்,எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபா நகரில் இருந்து கென்யா தலைநகர் நைரோபிக்கு நேற்று புறப்பட்டது.

இந்த விமானத்தில் 149 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

விமானம் புறப்பட்டு 50 கி.மீ தொலைவில் உள்ள பிஷோப்டு பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில், கென்யாவைச் சேர்ந்த 32 பேர், எத்தியோப்பியாவைச் சேர்ந்த 9 பேர், கனடாவைச் சேர்ந்த 18 பேர், சீனா, இத்தாலி, அமெரிக்கா வைச் சேர்ந்த தலா 8 பேர், பிரான்ஸ், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 7 பேர், எகிப்து நாட்டைச் சேர்ந்த 6 பேர், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 5 பேர், இந்தியா, ஸ்லோவோகியா நாடுகளைச் சேர்ந்த தலா 4 பேர் என மொத்தம் 157 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் பங்கேற்க இருந்த அந்தோனிஸ் மாவ்ரோபவுலாஸ் என்பவர்,விமானத்தை தவறவிட்டதால் உயிர் தப்பியுள்ளார்.

விபத்துக்குள்ளான விமானத்தில் செல்ல இருந்த அந்தோனிஸ் விமனநிலையத்திற்கு 2 நிமிடங்கள் தாமதமாக வந்துள்ளார்.

அவர் வருவதற்கு சிறிது நிமிடங்களுக்கு முன்பாக விமான நிலைய புறப்பாடு கேட் மூடப்பட்டுவிட்டது.இதனால் அவர் அனுமதிக்கப்படவில்லை.உடனே அந்தோனிஸ் விமானநிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.அவர்களோ உறுதியாக உள்ளே செல்ல அனுமதி மறுத்துவிட்டார்கள்.

இதுகுறித்து தனது முகநூலில் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ”நான் தாமதமாக வந்தால் என்னை விமான நிலைய ’கேட்’டுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.அவர்களுடன் வாக்குவாதம் செய்தும் எதுவும் நடக்கவில்லை.

அதனால் நான் மிகவும் அதிருப்தியில் இருந்தேன். சிறிது நேரம் கழித்து என்னை ‘விமான நிலைய காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள்’நீங்கள் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என கூறினார்கள்.

அப்போது தான் எனக்கு தெரிந்தது,நான் செல்லவிருந்த விமானம் விபத்தில் சிக்கி அனைத்து பயணிகளும் உயிரிழந்த விஷயம்.அதை கேட்டு நான் அதிர்ந்து போனேன்.

பின்னர் அந்த விமானத்தில் செல்லாததற்காக என்னிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் ,என்னுடைய பாஸ் போர்ட் உள்ளிட்டவற்றை சரிபார்த்துவிட்டு விட்டுவிட்டனர்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பயணம் செய்யவிருந்த விமானத்தின் டிக்கெட்டையும் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅண்ணா விட்டுருங்கண்ணா! கதறிய இளம்பெண்ணின் நெஞ்சை பதபதவைக்கும் காட்சி! கொடூரர்களின் அதிர்ச்சி செயல்!
Next articleவிஷ்ணு விஷால் தந்தை இவ்ளோ பெரிய அதிகாரியா! முதன் முறையாக வெளிவந்த புகைப்படம்!