19 பேர் படுகாயம்! கொழும்பில் இருந்து சென்ற பேருந்து விபத்து!

0
230

வவுனியா – பூனாவை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே மரமொன்றுடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 19 பேரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டினை இழந்த நிலையிலேயே பேருந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: