இது தான் விசேஷமாம்! சவப்பெட்டி நீரை அருந்த அலைமோதும் மக்கள் கூட்டம்!

0

எகிப்தில் 2000 ஆண்டுகள் பழமையான கல்லால் செதுக்கப்பட்ட அலங்கார சவப்பெட்டியினுள் காணப்பட்ட சிவப்பு நிறமான திரவத்தை அருந்த அனுமதிக்கக் கோரி பல்லாயிரக்கணக்கான மக்கள் மனுவொன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.

அந்த சிவப்பு நீரானது மரணத்தை அண்டவிடாது உயிரை சஞ்சீவியாக பேணும் ஒரு அமுதம் என அவர்கள் கருதுகின்றனர். ஆனால் நிபுணர்களோ அது சாக்கடை நீர் எனத் தெரிவிக்கின்றனர்.

கடற்கரை நகரான அலெக்ஸாண்ட்றியாவில் மேற்படி கல்லாலான சவப்பெட்டி இந்த மாத ஆரம்பத்தில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் அது தொடர்பில பல்வேறு ஊகங்கள் பரவி வருகின்றன.

அந்தக் கல்லாலான சவப்பெட்டி பண்டைய ஆட்சியாளர்கள் எவருக்கும் உடைமையானது அல்ல என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த சவப்பெட்டியிலிருந்த எச்சங்கள் குறித்து மேலும் விபரங்களைக் கண்டறிய அவற்றை மறுசீரமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில அந்த கறுப்பு நிற கல்லாலான சவப்பெட்டியில் தேங்கியுள்ள நீரை அருந்துவதற்கு கோரிக்கை விடுக்கும் விண்ணப்ப மனுவில் 11000 பேருக்கும் அதிகமானோர் கைச்சாத்திட்டுள்ளனர்.

கிரேக்க ஆட்சியாளரான மகா அலெக்ஸாண்டருக்கு இந்த சவப்பெட்டி சொந்தமானது என அவர்கள் நம்புகின்றனர்.

அந்த சவப்பெட்டியிலான நீரை அருந்துவது அதன் சக்திகளை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சவப்பெட்டி திறக்கப்பட்டமையானது சாபத்தை கட்டவிழ்த்து விடுவதாகவுள்ளதாக வேறு சிலர் தெரிவித்துள்ளனர்.

அந்த மர்மமான 10 அடி நீளமும் 6.5 அடி உயரமும் கொண்ட சவப்பெட்டி தரையிலிருந்து 16 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்தது.

30 தொன் நிறையுடைய அந்த சவப்பெட்டியில் 3 உருக்குலைந்த எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டன.

தற்போது அந்த 3 எலும்புக்கூட்டு எச்சங்களும் அலெக்ஸாண்டறியா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article19 பேர் படுகாயம்! கொழும்பில் இருந்து சென்ற பேருந்து விபத்து!
Next article3 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான தகவல்! பாவ மன்னிப்பு ரகசியம் அம்பலமானதால் தற்கொலை செய்துகொண்ட பெண்!