17 வயது சிறுமியை உயிருடன் விழுங்க பார்த்த சுறா மீன்! அதனுடன் போராடிய அவரின் தந்தை! இறுதியில் நடந்தது என்ன!

0
338

அமெரிக்காவில் 17 வயது சிறுமியை சுறா மீன் உயிரோடு விழுங்க பார்த்த நிலையில் அதனுடன் போராடி சிறுமியின் உயிரை அவர் தந்தை காப்பாற்றியுள்ளார்.

வடக்கு கரோலினா மாகாணத்தின் அட்லாண்டிக் கடற்கரைக்கு ஞாயிறு அன்று பெய்ஜ் விண்டர் (17) என்ற சிறுமி சென்ற நிலையில் கடலில் குளித்தார்.

அப்போது கடலில் இருந்த சுறா மீனின் தாக்குதலுக்கு உள்ளான பெய்ஜை காப்பாற்ற அவர் தந்தை போராடினார்.

சுறா மீனானது பெய்ஜை உயிருடன் விழுங்க பார்த்த நிலையில் அவர் தந்தை அதன் மூக்கில் ஐந்து முறை குத்தியுள்ளார்.

இதையடுத்து சுறாமீன் பெய்ஜை விட்டு சென்றது.

தந்தையின் துணிச்சலான செயலால் பெய்ஜ் உயிர் பிழைத்த போதிலும், அவர் தனது வலது கையில் சில விரல்களையும், முழங்காலுக்கு கீழே இடது காலையும் இழந்துள்ளார். இப்போது அவர் மருத்துவமனையில் குணமாகி வருகிறார்.

இதனிடையில் பெய்ஜின் மருத்துவ செலவுக்காக அவர் குடும்பத்தார் நிதி வசூல் செய்து வரும் நிலையில் தற்போது வரை £6,000க்கும் அதிகமாக பணம் கிடைத்துள்ளது.

Previous articleகண்ணை பறிக்கும் பீங்கான் பாத்திரம்! இது எதனால் ஆனதுனு தெரிந்தால் கண்டிப்பா முகம்சுழிப்பீங்க!
Next articleஇளம் சகோதரியின் ரகசியத்தை கண்டுபிடித்த 3 சகோதரர்கள்! ஆத்திரத்தில் செய்த செயலால் நேர்ந்த விபரீதம்!