1374 ஆளில்லா விமானங்களை ஒரே நேரத்தில் பறக்கவிட்டு சீனா சாதனை!

0

பல நாடுகளின் அன்றாட பிரச்சனைகளில் ஒன்றாக போக்குவரத்து நெரிசலும் காணப்படுகிறது. அந்த வகையில் போக்குவரத்து நெரிசலை பெருமளவில் கட்டுப்படுத்த சீனாவில் டிரோன் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த விமான சேவைக்கு அங்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் சீனாவை சேர்ந்த பிரபல ஆளில்லா விமான தயாரிப்பு நிறுவனம் ஒரே நேரத்தில் 1374 விமானங்களை பறக்கவிட்டு கின்னஸ் சாதனை புரிந்துள்ளது.

சீனாவை சேர்ந்த ட்ரோன் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் 1374 விமானங்களை பறக்க விட்டது. ஒரே நேரத்தில் 1374 விமானங்கள் பறந்தது கின்னஸ் சாதனையாக கருதப்படுகிறது.

இந்த சாகசக் காட்சி வானில் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போல பிரமிப்பாய் இருந்தது. சியான் நகரில் இரவு நேரத்தில் வெறும் 13 நிமிடங்களில் 1374 டிரோன்கள் வண்ண விளக்குகளை ஒளிரச் செய்து அழகிய ஒளி உருவங்களை உருவாக்கியவாறு பறந்தது காண்போரின் கண்களை வியப்பில் ஆழ்த்தியது.

ஏற்கனவே தென்கொரிய குளிர்கால ஒலிம்பிக் போட்டியின்போது 1218 டிரோன் விமானங்களை பறக்க விட்டது சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதெய்வமாக மாறும் மனிதர்கள். சவுக்கால் அடித்துக்கொள்ளும் தெய்வங்கள்- அதிர்ச்சிதரும் காட்சிகள்!
Next article16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த நபர்: வெளியான பகீர் பின்னணி!