ஸ்லிம்மா இருக்கணுமா? அப்போ காலையில இதெல்லாம் சாப்பிடுங்க!

0

நாம் தினமும் காலையில் சாப்பிடும் உணவுகளில் இருந்தே நமக்கு தேவையான சத்துக்களும், அன்றைய பொழுதில் நாம் செய்யும் வேலைக்கான சக்தியும் கிடைக்கிறது.

காலையில் நாம் சாப்பிடாமல், மாலை வேளையில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதே அதிகமான உடல் பருமன் ஏற்பட காரணமாக இருக்கிறது.

ஸ்லிம்மான உடலமைப்பை பெறுவதற்கு நாம் காலையில் ஆரோக்கியமான நல்ல உணவுகளையும், மதியம் மிதமான அளவும், இரவு நேரத்தில் அதைவிட குறைவாகவும் சாப்பிட வேண்டும்.

ஓட்ஸ்
ஓட்ஸ் குறைவான கலோரிகள் மற்றும் அதிக நார்சத்துக்களை கொண்டுள்ளது. எனவே இந்த ஓட்ஸை காலை உணவாக சாப்பிட்டால், நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைத்து, அதிகமான எனர்ஜியை தருகிறது.

முட்டை
முட்டையில் அதிக விட்டமின்கள், இரும்பு சத்து மற்றும் புரோட்டின் உள்ளது. மேலும் இதில் நல்ல கொலஸ்ட்ரால் இருப்பதால், தினமும் காலையில் ஒரு முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் வயிறு மற்றும் கல்லீரலில் படியும் கெட்டக் கொழுப்புகளைக் குறைக்கிறது.

தயிர்
தயிரில் அதிக புரோட்டின் மற்றும் மினரல்கள் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே தயிரை காலை உணவில் சேர்த்துக் கொண்டால், நரம்புகள் வலுவடைந்து, உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகளைக் குறைக்கிறது.

ஆப்பிள்
ஆப்பிளில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய விட்டமின்களும், நார்சத்துக்களும் அதிகமாக நிறைந்துள்ளது. இதை காலையில் தினமும் சாப்பிட்டால் வயிறு நிறைவதுடன், உடல் பருமனையும் குறைக்கிறது.

பாதாம்
பாதாம் பருப்பில் அதிக அளவு நார்சத்து, இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

எனவே தினமும் காலையில் மூன்று பாதாம் பருப்பை ஊற வைத்து, அதை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், நம் உடம்பில் உள்ள கெட்டக் கொழுப்புகள் கரைத்து, இதயத்தை பலப்படுத்துகிறது.

வாழைப்பழம்
காலையில் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால், நம் குடலில் உள்ள கிருமிகள் மற்றும் பூச்சிகளை வெளியேற்றுகிறது. மேலும் இதில் உள்ள அதிக நார்சத்துக்கள் கெட்டக் கொழுப்பைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கிறது.

பசலைக் கீரை
பசலைக் கீரை கால்சியம் சத்துக்களை அதிகமாக கொண்டுள்ளது. எனவே இந்தக் கீரையை காலையில் சப்பாத்திக்கு கிரேவி போல செய்து சாப்பிட்டால், நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து, வயிறு உப்பிசம் ஏற்படுவதை தடுக்கிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதினம் ஒரு கிரீன் ஆப்பிள்! கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்!
Next articleமீன் எண்ணெய் மாத்திரை எதற்காக சாப்பிடுகிறோம்!