இனிப்புக்களின் மீது ஒருவருக்கு ஆவல் அதிகரித்தால் உடலில் என்ன சத்து குறைபாடு தெரியுமா?
இனிப்புக்களின் மீது ஒருவருக்கு ஆவல் அதிகரித்தால், அது உடலில் மக்னீசியம் குறைபாடு அல்லது நீர்ச்சத்து குறைபாடு உள்ளது என்பதற்கான அறிகுறியாக கருதப்படுகின்றது என்பது உங்களுக்கு தெரியமா?
மேலும், சாக்லேட்டில் டார்க் சாக்லேட் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மக்னீசியம் குறைபாடு அல்லது நீர்ச்சத்து குறைபாடு என்பவற்றை சிறப்பாக பேணுவதுடன், உடல் எடையையும் குறைப்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைக் கொண்டு ஸ்மூத்தி (மிருதுவாக்கி குடிபானம்) தயாரித்து தினமும் குடித்து வருதல் மிகச் சிறந்த பலனைத் தரும்.
கொக்கோ பவுடர்ஃசாக்லேட் ஃப்ளேவர் புரோட்டீன் பவுடர்
சோர்வு, குறைந்த இரத்த அழுத்தம், இதய நோய்களை எதிர்த்துப் போராடும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் உள்ள சற்று கசப்பான கொக்கோ பவுடரினைப் பயன்படுத்தி சாக்லேட் தயாரிக்கும் போது, அந்த பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் அழிக்கப்படுகிறதனால் அதிலிருந்து கிடைக்கக் கூடிய முழு நன்மையையும் பெறமுடியாது போவதனால், கொக்கோ பவுடரைக் கொண்டு வீட்டிலேயே ஸ்மூத்தி (மிருதுவாக்கி குடிபானம்) அல்லது மில்க் ஷேக் தயாரித்துக் குடிப்பது நல்லது.
பசலைக்கீரை
அதிகளவான இரும்புச்சத்தினைக் கொண்ட இந்த கீரையினை ஸ்மூத்தியில் (மிருதுவாக்கி குடிபானம்) சேர்க்கும் போது பசலைக்கீரையின் சுவை மறைந்து இந்த ஸ்மூத்திக்கு (மிருதுவாக்கி குடிபானம்) ஒரு அடர்த்தியைக் கொடுப்பதுடன், உடலில் நல்ல மனநிலைக்குத் தேவையான செரடோனின் ஹார்மோனின் அளவினையும் அதிகரிக்கின்றது.
ஆளி விதை
இதய ஆரோக்கியத்திற்குத் தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களினை அதிகளவில் கொண்ட ஆளி விதையானது செரடோனின் உற்பத்தியை ஊக்குவிப்பதுடன், இதிலுள்ள் கரையக்கூடிய நார்ச்சத்துக்களினால், இரத்த சர்க்கரை அளவு உயராமல் குறைக்கும் அதேவேளை, புற்றுநோய் செல்களை அழிப்பதாகவும் பல்வேறுபட்ட ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
சைலியம் உமி பவுடர் (Psyllium Husk Powder)
இந்த பவுடரிலுள்ள நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சுத்தம் செய்வதோடு, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ளுவதுடன், நீண்ட நேரம் பசி எடுக்காமலும் பார்த்துக்கொள்ளும்.
இனிப்பு இல்லாத பாதாம் பால்
மெட்டபாலிக் பிரச்சனை உள்ளவர்கள், செரடோனின் உற்பத்தியை அதிகரிக்கும் இப்பாலை தினமும் குடித்து வருவது மிகச் சிறந்த பலனைத் தரும்.
தேவையான பொருட்கள்:
கொக்கோ பவுடர் – 1 மேசைக்கரண்டி
சாக்லேட் ப்ளேவர் புரோட்டீன் பவுடர் – 1 1/2 மேசைக்;கரண்டி
பசலைக்கீரை – 1 கையளவு
சைலியம் உமி பவுடர் – 1 மேசைக்;கரண்டி;
இனிப்பு இல்லாத பாதாம் பால் – 1 கப்
பாதாம்ஃமுந்திரி வெண்ணெய் – 15 கிராம்
ஆளி விதை பவுடர் – 15 கிராம்
தயாரிக்கும் முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ப்ளெண்டரில்ஃமிக்ஸியில் போட்டு, 30 நொடிகள் நன்கு அரைத்தால், பானம் தயாராகிவிடும்.
குறிப்பு
இந்த ஸ்மூத்தியை(மிருதுவாக்கி குடிபானம்) குடிப்பதாக இருந்தால், தினமும் தவறாமல் குறைந்தது 40 நிமிடம் சற்று கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு, இந்த ஸ்மூத்தியை (மிருதுவாக்கி குடிபானம்) குடித்துவரும் போது விரைவில் மிகச்சிறந்த பலனைப் பெறமுடியும்.
By: Tamilpiththan