பொடுகுத் தொல்லையில் இருந்து விரைவில் விடுபட சில இயற்கை உபாயங்கள் எளிய முறையில்!

0

தற்காலத்தில் இருப்பது போல் சரும பிரச்சனைகள் தலை முடி பராமரிப்பு தொந்தரவுகள் போன்றவை நமது முன்னோர் காலத்தில் இருந்ததில்லை. எல்லா பெண்களும் மஞ்சள் தேய்த்து குங்குமம் இட்டு வீட்டிலேயே கண் மை தயாரித்து கண்களுக்கு மையிட்டு அழகாக இருந்தனர். 70களிலும் 80களிலும் தொடங்கப்பட்ட விளம்பர நிறுவனத்தின் பிடியில் சிக்கி அன்று முதல் இன்றைய தலைமுறையினர் வரை சின்னாபின்னமாகி வருகிறோம்.

விளம்பரங்களில் வரும் நடிகை பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பு போன்றவற்றை வீட்டில் பயன்படுத்த தொடங்கினோம். நாமும் நடிகர் நடிகைகள் போல் மேக்கப் போட்டு கொள்ள ஆரம்பித்தோம். இவற்றோடு சேர்த்து சரும பிரச்சனைகளும் தலை முடி பிரச்சனைகளும் தலையெடுக்க ஆரம்பித்தன. நம் வீட்டில் அரைத்த சீயக்கையாயை விட்டு விட்டு கடைகளில் கிடைக்கும் ஷாம்பூவை பயன்படுத்திய பின்னர் முடி உதிர்வு, பொடுகு, வழுக்கை போன்றவை ஏற்பட தொடங்கின.

இத்தகைய பிரச்சனைகளுக்கான தீர்வுகளை மீண்டும் இரசாயன முறையில் தேடினால் நிச்சயம் கிடைக்காது. எங்கு தொலைத்தோமோ அங்கு தேடுவது தான் சரியான தீர்வு. ஆகையால் இயற்கையை தொலைத்த நாம் மீண்டும் அதனை கண்டுபித்து பயன்படுத்துவதே நல்லது.

தலைமுடி அழகை குறைப்பதில் பெரும் பங்கு பொடுகுக்கு உண்டு. அழகாக அலங்கரித்த தலையில் அங்கங்கே காணப்படும் வெள்ளை திட்டுகளாக பொடுகு தோன்றும்போது பார்க்க நன்றாக இருக்காது. கூடவே அரிப்பும் சேர்த்து தலை முடி அழகை கெடுத்து விடும். ஆகவே பொடுகை போக்க சில இயற்கை உபாயங்கள் எளிய முறையில் கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயனடையுங்கள்!

வேப்பெண்ணெய் :
பொடுகை போக்க வேப்பெண்ணெய் ஒரு மிக சிறந்த பொருள். இது பொடுகை போக்க மட்டும் அல்ல தலையில் இருக்கும் பல்வேறு தொற்றுகளை போக்க வல்லது. குறிப்பாக பேன் அதிகமாக இருப்பவர்கள் இதனை பயன்படுத்தலாம். தலையில் வேப்பெண்ணெய் தடவி 1 மணி நேரம் ஊற வைத்து பின்பு தலையை அலசலாம்.

பேக்கிங் சோடா:
பேக்கிங் சோடா மற்றும் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து செய்த கலவையை தலைக்கு தடவி நன்றாக மசாஜ் செய்யலாம். 30 நிமிடங்கள் ஊற வைத்து பின்பு மிதமான ஷாம்பூவால் தலையை அலசலாம். இவை இரண்டிலும் கிருமி மற்றும் பூஞ்சையை எதிர்க்கும் தன்மை உள்ளதால் பொடுகு விரைவில் குறையும்.

தேங்காய் எண்ணெய்:
தினமும் தலை முடிக்கு தேங்காய் எண்ணெய் தடவுவது நல்லது. சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் நல்ல பலன் தரும். தேங்காய் எண்ணெய்யில் இருக்கும் ஆன்டி பாக்டீரியல் தன்மை மற்றும் பூஞ்சை எதிர்ப்பு தன்மை மற்றும் அழற்சியை குறைக்கும் தன்மை, பொடுகை போக்கி நீளமான தலைமுடியை பெற உதவுகிறது.

ஆலிவ் எண்ணெய்:
ஆலிவ் எண்ணெய் ஒரு இயற்கையான மாய்ஸ்ச்சரைசேர். இது தலை முடிக்கு நல்ல ஈரப்பதத்தை தந்து முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. ஆலிவ் எண்ணெய்யை மிதமாக சூடாக்கி உச்சந்தலையில் மசாஜ் செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.
இரவில் உறங்க செல்வதற்கு முன் இதனை செய்யலாம். இரவு முழுதும் எண்ணெய், தலையின் வேர்கால்களுக்குள் ஊடுருவி பொடுகை குறைக்கும். மறுநாள் காலை தலையை அலசலாம்.

டீ ட்ரீ எண்ணெய்:
இன்றைய நாட்களில் டீ ட்ரீ எண்ணெய்யை பல ஷாம்பு தயாரிப்புகளில் பயன்படுத்துகின்றனர். ஷாம்பு தயாரிப்பில் 5% அளவு டீ ட்ரீ எண்ணெய்யை பயன்படுத்துவதால் கூட பொடுகை குறைக்க முடிகிறது. நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூவில் டீ ட்ரீ எண்ணெய் இல்லாமல் இருந்தால், நேரடியாக அந்த எண்ணெய் சில துளிகள் எடுத்து உங்கள் ஷாம்பூவில் சேர்த்து தலைக்கு பயன்படுத்தலா

ஓட்ஸ்:
ஓட்ஸை சாப்பிட மட்டுமே பயன்படுத்துபவர்கள் இனி பொடுகை போக்கவும் பயன்படுத்தலாம். இது ஒரு சிறந்த தீர்வாகும். இது தலை முடியின் ஆரோக்கியம் மற்றும் ஈரப்பதத்திற்கு மிகவும் சிறந்தது.

வேர்க்கால்களை வலுவாக்கி ஈரப்பதத்துடன் வைக்கிறது. சிறிது ஓட்ஸை நீருடன் சேர்த்து கலக்கி பேஸ்ட் போல் செய்து, தலைக்கு தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். 1 மணி நேரம் கழித்து தலையை அலசவும்.

எலுமிச்சை சாறு:
எலுமிச்சை சாறில் இருக்கும் அமிலதன்மை தலைமுடியின் pH அளவை சமன் செய்ய உதவுகிறது. 1-2 ஸ்பூன் எலுமிச்சை சாறை எடுத்து தலையில் தடவி ஊற விடவும். 1 மணி நேரம் கழித்து தலையை அலசவும். தினமும் இதை செய்து வருவதால் பொடுகு மறைந்து தலை முடியும் பளபளப்பாக இருக்கும்.

அல்லது எலுமிச்சை சாறுடன் சிறிதளவு பூண்டு அல்லது சந்தன எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து, அந்த கலவையை தலைக்கு தடவலாம். பூண்டு மற்றும் சந்தன எண்ணெய்யில் ஆன்டி மைக்ரோபியல் தன்மை அதிகமாக உள்ளதால் பொடுகு உடனே மறைகிறது. ஒரு பங்கு எலுமிச்சை சாறுடன் 2 பங்கு பூண்டு அல்லது சந்தனஎண்ணெய்யை சேர்த்து சிறிதளவு தேன் சேர்த்து பயன்படுத்தலாம்.

கற்றாழை:
வறண்ட மற்றும் அரிப்பு மிகுந்த தலைமுடிக்கு கற்றாழை ஏற்ற ஒரு பொருளாகும். பொடுகால் உண்டாகும் அரிப்பை கற்றாழை குறைக்கிறது. கற்றாழை ஜெல் அல்லது எண்ணெய்யை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து தலையை அலசலாம்.

மிளகு மற்றும் எப்சம் உப்பு :
மிளகு மற்றும் எப்சம் உப்பில் ஜின்க் மற்றும் செலினியம் அதிகம் உள்ளது. இவை இரண்டும் பொடுகை போக்க உதவுகின்றன.

சிறிதளவு மிளகு மற்றும் கல் உப்பை சேர்த்து பொடியாக்கி அதனுடன் சிறிதளவு தயிர் சேர்த்து அந்த கலவையை தலையில் தடவவும். 1 மணி நேரம் கழித்து தலையை அலசவும். இது மிகவும் பயனுள்ள முறையாக இருக்கும்.

என்னே வாசகர்களே! பொடுகை போக்க இவ்வளவு எளிமையான முறைகளா என்று ஆச்சர்யமாக உள்ளதா? உடனடியாக இவற்றை முயற்சித்து பொடுகில்லாத, அரிப்பில்லாத தலை முடியை பெற்றிடுங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஒற்றை தலைவலியை குணப்படுத்த 19 வீட்டு வைத்தியங்கள்!
Next article3 நாட்களில் உங்கள் பெருங்குடலை சுத்தம் செய்ய வேண்டுமா! இத சாப்பிடுங்க!