வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் உங்கள் உடலில் ஏற்படும் மோசமான விளைவுகள் என்னென்ன தெரியுமா?

0

உலகத்தில் அதிக நபர்களால் விரும்பி குடிக்கப்படும் ஒரு பொருள் என்றால் அது காபிதான். காபி குடிக்காத நாள் முழுமை பெறாத நாள் என்று நினைப்பவர்கள் கூட இருக்கத்தான் செய்கின்றனர். ஒரு நாளைக்கு கணக்கில்லமால் காபி குடிப்பவர்களும் இருக்கின்றனர். அதற்கு காரணம் காபியில் இருக்கும் உற்சாகம் அளிக்கும் குணமாகும்.

காபியில் அதிக ஆரோக்கிய பலன்கள் இருந்தாலும் அதில் சில பக்க விளைவுகளும் இருக்கத்தான் செய்கிறது. அதிக அளவில் காபி குடிப்பதோ அல்லது ஆரோக்கியமற்ற முறையில் தயாரிக்கும் காபியை குடிப்பதோ உங்கள் உடலில் பல பிரச்சினைகளை உண்டாக்கும். இந்த பதிவில் ஆரோக்கியமாக காபி குடிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

இயற்கையான காபியை தேர்ந்தெடுக்கவும்

ஆரோக்கியமான காபி என்பது இங்கிருந்துதான் தொடங்குகிறது. வழக்கமான காபி பெரும்பாலும் பூச்சிக்கொல்லிகளால் நிறைந்துள்ளது. எனவே இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட காபி பொடியை உபயோகிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. பெரும்பாலும் உள்ளூர் தயாரிப்புகளை உபயோகிப்பது உங்கள் காபிக்கு அதிக ஆரோக்கியத்தை சேர்க்கும்.

செயற்கை இனிப்புகளை தவிர்க்கவும்

இது வெளிப்படையான ஒன்றாகும், பொதுவாக காபியில் இனிப்பு பொருட்கள் எதுவும் சேர்க்காமல் குடிப்பதுதான் அதன் முழுமையான பலனை வழங்கும். ஆனால் இது மிகவும் கடினமானதாகும். எனவே சர்க்கரை சேர்த்துக் கொண்டாலும் குறைவான அளவில் சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் செயற்கை இனிப்புகள் சேர்ப்பது உங்கள் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும்.

காலை நேரத்தில் காபி மட்டும் குடிக்காதீர்கள்

இந்த பழக்கம் பலருக்கும் இருக்கும் ஒன்றாகும். தினமும் காலையில் காலை உணவை தவிர்த்து விட்டு வெறும் காபி குடிப்பதை வழக்கமாக கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். காபி குடிப்பது பசியை கட்டுப்படுத்தும், அதனால் அதனை உணவுக்கி மாற்றாக பலர் உபயோகிக்கிறார்கள், ஆனால் இது ஆரோக்கியமான பழக்கமல்ல. காலை உணவிரு பிறகு காபி குடிக்கலாம் ஆனால் காபியே காலை உணவாக இருப்பது ஆபத்தானதாகும்.

காபியில் இலவங்கப்பட்டை சேர்க்கவும்

உங்கள் காபியில் அதிகமான ஆக்ஸிஜனேற்றிகளைச் சேர்த்து உங்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த வேண்டுமா? ஆம் எனில், உங்கள் காபியில் சிறிதளவு இலவங்கப்பட்டை சேர்க்கவும். இலவங்கப்பட்டைக்கு மருந்தாகவும், மசாலாப் பொருளாகவும் மிகப்பெரிய வரலாறு உள்ளது. சாப்பிட்ட பிறகு காபி குடிப்பது இரத்தத்தில் இருக்கும் சர்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.

காபி குடிப்பதற்கு முன் சாப்பிடவும்

தினமும் அந்த நாளை காபியுடன் தொடங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம், ஆனால் இவ்வாறு செய்வது உங்களின் ஆற்றலை குறைக்கும். உங்கள் உடல் காபிக்குள் காணப்படும் காஃபினுக்கு பதிலளிக்கும் வகையில் இன்சுலினை வெளியிடுகிறது. இதனால் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு பெருமளவில் குறையும். இது உங்களை மிகவும் சோர்வாக உணரவைக்கும். எனவே காபி குடிப்பதற்கு முன் எதையாவது சாப்பிடுவது நல்லது.

வீட்டு காபி அதிகமாக குடியுங்கள்

பெரும்பாலும் வீட்டில் காபி குடிப்பதை பழக்கமாக்கி கொள்ளுங்கள். கடைகளில் குடிக்கும் காபி சுவையானதாக இருந்தாலும் அதில் ஆபத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும். இந்த வகை பாக்டீரியாக்கள் உங்களின் குடலின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

அதிகம் குடிப்பதை தவிர்க்கவும்

மிதமான அளவில் காபி குடிப்பது ஆரோக்யமானதுதான். அதிகளவு காபி குடிப்பது அதனால் ஏற்படும் நன்மைகளை தடுக்கும். சராசரியாக ஒரு கப் காபியில் 96மிகி காஃபைன் உள்ளது, ஒருநாளைக்கு இரண்டு கப் காபி குடிப்பது உங்களுக்கு எந்த பக்கவிளைவையும் ஏற்படுத்தாது. ஆனால் ஒருநாளைக்கு 400 மிகி அளவிற்கு அதிகமாக காஃபைன் எடுத்துக் கொள்வது உங்களுக்கு பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

பேப்பர் வடிகட்டியை பயன்படுத்தவும்

நன்கு காய்ச்சப்பட்ட காபியில் இருக்கும் டைட்டர்பீன் என்ற கஃபெஸ்டால் இரத்தத்தில் இருக்கும் கொழுப்பின் அளவை அதிகரிக்கும். இதனை குறைக்கும் எளிய வழி பேப்பர் வடிக்கட்டியை பயன்படுத்தவும். பேப்பர் வடிகட்டி கொண்டு காபியை வடிகட்டுவது அதிலிருக்கும் கஃபெஸ்டால் அளவை குறைக்கிறது. ஆனால் இதனால் காபியில் இருக்கும் காஃபைன் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்க்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுரு பெயர்ச்சி பலன்கள் 2019: கும்ப ராசிக்கு முயற்சிகளில் வெற்றி – பணமழை பொழியும்
Next articleஇன்றைய ராசிப்பலன் – 29.07.2019 திங்கட்கிழமை !