வெறும் வயிற்றில் இந்த பழத்தை சாப்பிட்டால் மொத்தமும் க்ளோஸ்!

0

தினமும் காலையில் எழுந்தவுடன் வெறுமையான வயிற்றில் இரண்டு டம்ப்ளர் சூடான நீரை அருந்துவதன் மூலமாக உடல் எடையானது குறைகிறது. உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகளானது குறைகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து., சருமம் இளமை தோற்றத்தை பெறுகிறது. உடலுக்கு தேவையான புத்துணர்ச்சி கிடைக்கப்பெற்று., செரிமானமானது சீராக்கப்பட்டு., மலச்சிக்கல் பிரச்னையை சரி செய்கிறது.

இளசூடு உள்ள நீரில் தேனை கலந்து அருந்தி வந்தால் உடலுக்கு பலம் கிடைக்கும். உடலில் இருக்கும் சளி மற்றும் இருமல் பிரச்னையை சரி செய்யும். நமது குரலை மென்மைப்படுத்தும். நமது உடலில் இருக்கும் இரத்தத்தை சுத்தம் செய்து., இரத்த ஓட்டத்தினை சீர் செய்யும். வயிற்றில் ஏற்படும் எரிச்சலை சரி செய்து., மலச்சிக்கலை சரிப்படுத்தி., உடல் எடையை குறிக்கும். மேலும்., தூக்கமின்மை பிரச்சனையானது சரியாகும்.

வெந்தயம் அல்லது சீரகத்தை நீரில் ஊற வைத்து அதன் நீரை காலையில் அருந்தி வெந்தயம் அல்லது சீரகத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வெந்தயத்தின் மூலமாக உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கப்பெற்று., இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவானது கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. சீரகத்தின் மூலமாக அஜீரணக்கோளாறுகள் தடுக்கப்பட்டு., உடலுக்கு குளிர்ச்சியானது கிடைக்கிறது.

முளைகட்டிய பயிரில் இருக்கும் வைட்டமின்., தாது உப்பு., புரோட்டீன்., என்சைம்ஸ் மற்றும் ஆன்டிஆக்சிடன்ட் போன்ற சத்துக்களின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கப்பட்டு., இரத்தத்தில் இருக்கும் கொழுப்புகளின் அளவானது குறைகிறது. இதன் மூலமாக நமது உடலை இருதய நோயில் இருந்து பாதுகாத்தும்., உடல் எடையை கட்டுப்படுத்துகிறது. அலர்ஜி உள்ளவர்கள் மற்றும் வாயுதொல்லை உள்ளவர்கள் முளைகட்டிய பயிறு வகைகளை தவிர்ப்பது நல்லது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் பழங்கள் மற்றும் பழச்சாறுகளை சாப்பிட்டு வந்தால் உடலின் ஆரோக்கியமானது மேம்படும்., உடலுக்கு பொலிவு கிடைக்கும். தினம்தோறும் காலையில் ஆப்பிள்., ஆரஞ்சு., தர்பூசணி மற்றும் பப்பாளி பழங்களை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

காலையில் எழுந்தவுடன் வாழைப்பழ. மற்றும் ஆரஞ்சு பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது. ஏனெனில் இதன் காரணமாக உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகோடை கால கொப்பளங்கள்! தப்பிப்பது எப்படி!
Next articleஒருத்தர முழுசா நம்பறதுக்கு முன்னாடி அவர்கிட்ட இந்த அறிகுறி இருக்கான்னு மொதல்ல பாருங்க!