அமைதியாக இருந்து ஆளைக் தாக்கும் கல்லீரல் கொழுப்புக்களை சரிசெய்யும் கிராமத்து கை வைத்தியங்கள்!

0

இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களால், கல்லீரல் நோய்கள் ஒருவருக்கு சீக்கிரம் வந்துவிடுகிறது. கல்லீரல் நோய்கள் உ(யிரு)க்கே ஆ(பத்)தை ஏற்படுத்தும். ஆனால் அதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், தடுக்க முடியும். கல்லீரலில் ஏற்படும் முக்கியமான ஓர் பிரச்சனை தான் கல்லீரல் கொழுப்பு.

கல்லீரலில் கொழுப்பு செல்கள் அதிகமாக இருக்கும் நிலை தான் கல்லீரல் கொழுப்பு. கொழுப்புச் செல்கள் அதிகமானால் கல்லீரலில் உள்ள திசுக்கள் அழிக்கப்பட்டு, அதனால் நாளடைவில் கல்லீரல் செயலிழக்கக்கூடும். மேலும் இந்நிலையில் கல்லீரல் வீங்கி இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த பிரச்சனையானது சர்க்கரை நோய் மற்றும் குண்டாக இருப்பவர்களை அதிகம் தாக்குவதோடு, கொழுப்புமிக்க உணவுகளை உண்போரையும் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

கல்லீரல் கொழுப்பு ஏற்படாமல் இருக்கவும், கல்லீரலில் நச்சுக்கள் சேராமல் இருக்கவும் ஒருசில வழிகளை பின்பற்றி வந்தால், நிச்சயம் கல்லீரல் கொழுப்பு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். மேலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிகள் கிராமத்து கை வைத்தியங்கள் என்பதால் பயப்படாமல் மேற்கொள்ளலாம்.

எலுமிச்சை மற்றும் தண்ணீர்

ஒரு மாதம் தொடர்ந்து எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, அதில் உள்ள வைட்டமின் சி கல்லீரலில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் வெளியேற்றி, கல்லீரலின் செயல்பாட்டினை அதிகரிக்கும். தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்…

மஞ்சள் மற்றும் தண்ணீர்

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து, 15 நாட்கள் தினமும் இரண்டு டம்ளர் குடித்து வர, கல்லீரலில் உள்ள கொழுப்பு செல்கள் கரைக்கப்பட்டு, கல்லீரல் சுத்தமாகும். தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்…

நெல்லிக்காய் ஜூஸ்

நெல்லிக்காயில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளதால், அது கல்லீரலை சுத்தம் செய்ய உதவும். அதிலும் உங்களுக்கு கல்லீரல் பிரச்சனை இருப்பின், தொடர்ந்து 25 நாட்கள் தினமும் காலையில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வர, விரைவில் குணமாகியிருப்பதை உணர்வீர்கள். தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்…

அதிமதுரம்

அதிமதுரம் இரத்தத்தை சுத்தம் செய்வதோடு, கல்லீரல் திசுக்களின் அளவை அதிகரித்து, கல்லீரல் நோய்களைத் தடுக்கும். அதற்கு அதிமதுரத்தை பொடி செய்து, அதனை ஒரு டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, நல்ல நிவாரணம் கிடைக்கும். தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்…

வினிகர் மற்றும் தண்ணீர்

ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீரில் சில துளிகள் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து உணவு உண்பதற்கு முன் குடித்து வர வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், கல்லீரலில் உள்ள கொழுப்புச் செல்கள் கரைக்கப்படுவதோடு, அழுக்குகளும் வெளியேறி, கல்லீரல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

க்ரீன் டீ

ஆய்வு ஒன்றில் தினமும் காலை மற்றும் மாலையில் ஒரு கப் க்ரீன் டீ குடித்து வந்தால், உடல் எடை குறைவதோடு, கல்லீரலின் இயக்கம் அதிகரித்து, அதன் ஆரோக்கியம் மேம்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு

முக்கியமாக அன்றாடம் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, கொழுப்புமிக்க உணவுகளை அதிகம் உட்கொள்வதைத் தவிர்த்து மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற கெட்ட பழக்கங்களைத் தவிர்த்து, குடிக்கும் நீரின் அளவை அதிகரித்து வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஒற்றைத் தலைவலி பிரச்சனை உள்ளவர்கள் அன்னாசிப்பழத்துடன் இதை கலந்து சாப்பிட்டு பாருங்கள்.
Next articleஇரண்டு கண்களும் பார்வை அற்றவர்கள் உலகை பார்க்க மூன்றாவது கண் கண்டுபிடிப்பு!