விஷ பாம்பிடம் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய நாய்! அடுத்த நிமிடமே துடிதுடித்து இறந்த சோகம்!

0
1814

இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தில் விஷ பாம்பிடம் இருந்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய நாய் அடுத்த சில நிமிடங்களில் துடிதுடித்து இறந்துள்ளது.

ஒடிஷா மாநிலம் புவனேஷ்வர் பகுதியை சேர்ந்த அமீன் ஷரீஃப் தன்னுடைய குடும்பத்தாருடன் நள்ளிரவில் உறங்கி கொண்டிருந்துள்ளார்.

அப்போது தங்களுடைய செல்லப்பிராணி டைசன் பயங்கர சத்தத்துடன் குறைக்கும் சத்தை கேட்டு விழித்துள்ளனர். வெளியில் வந்த போது டைசன், பாம்பு ஒன்றுடன் சண்டையிட்டு அதனை கடித்து தரையில் போட்டிருப்பதை பார்த்தனர்.

இந்த சம்பவத்தில் நாயின் வலது பக்கத்தில் பாம்பு கடித்ததற்கான அடையாளம் இருந்துள்ளது. இந்தியாவின் பாம்பு ஹெல்ப்லைனுக்கு போன் செய்த அமீன், நடந்தவை குறித்து விளக்கியதோடு வீடியோவினை அனுப்பி வைத்தார்.

அதனை பார்த்த அதிகாரி, கடித்த பாம்பு கொடிய விஷம் கொண்ட இந்திய நாகம் என கூறியதோடு, உடனடியாக நாயை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால் அடுத்த 30 நிமிடத்திற்குள்ளவே நாய் பரிதாபமாக துடிதுடித்து இறந்துள்ளது. இந்த சம்பவமானது தங்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருப்பதாக அமீன் குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

Previous articleசூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய வம்சாவளி பெண்! தற்கொலை செய்துகொண்ட காதலன்!
Next articleஅளவுக்கு அதிகமான குடி போதையால் மரணமடைந்த பிரபல ஆபாச பட நடிகர்!