வியர்வை நாற்றம் எதனால் ஏற்படுகிறது!

0

பொதுவாக வியர்வை நாற்றம் என்பது எல்லோருக்கும் இருக்கக்கூடிய பொதுவான ஒன்றாகும்.

ஆனால் சிலருக்கு வியர்வை நாற்றம் என்பது பக்கத்தில் இருப்பவரை கூட அருகில் செல்ல முடியாமல் செய்துவிடும்

வியர்வை நாற்றத்தை போக்குவதற்கு வாசனை திரவியங்களை பயன்படுத்தினாலும் சில சமயங்களில் அதனால் பக்கவிளைவுகளும் வரலாம்.

இதனால் இயற்கை முறைகளை பின்பற்றி வியர்வை நாற்றத்தை போக்கலாம்,

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்…

எலுமிச்சை சிறந்தது
அரைமூடி எலுமிச்சையை (மிகவும் பழுத்திருக்க கூடாது) எடுத்து, உடல்முழுவதும், குறிப்பாக வியர்வை வரும் இடங்களில் ( அக்குள் உள்ளிட்ட இடங்கள் ) தேய்த்துவிட்டு குளித்தால் அன்றைய நாள் முழுவதும் வியர்வை நாற்றம் வராமல் இருக்கும். அல்லது குளித்துவிட்டு, சிறிதளவு பஞ்சில் எலுமிச்சை சாறை நனைத்து அக்குள் உள்ளிட்ட அதிகம் வியர்வை வரும் இடங்களில் தேய்த்தும் கொள்ளலாம். அதில் உள்ள அசிடிட்டி தன்மை, பாக்டீரியாக்களை அழித்து அவற்றை கட்டுக்குள் வைக்கிறது. டியோடரன்ட், வியர்வை தடுக்கும் ஆன்டி பெர்ஸ்பிரன்ட் போன்றவற்றை உபயோகிப்பதை விட குறைந்த செலவில் இயற்கையான வழியில் உடல் வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்தக்கூடிய வழிகளில் எலுமிச்சை முதன்மையானதாக விளங்குகிறது.

இன்னுமொரு குறிப்பு : 2 தேக்கரண்டி சீயக்காய் தூள், 2 தேக் கரண்டி வெந்தயத் தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து களி போல் தயாரித்து, ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு தேய்த்து குளித்து வர வேண்டும். அப்படி தொடர்ந்து செய்து வந்தால், இரண்டே வாரத்தில் உடலில் நிரந்தமாக குடி கொண்டிருக்கும் வியர்வை நாற்றம் மறைந்து தலையும், உடலும் சுத்தமாகி மணம் வீசும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் என்பது ஆப்பிள் பழத்தில் இருந்து செய்யப்படும் ஒருவகை வினிகராகும். இதை ஒரு கப் நீரில் கலந்து அக்குளைக் கழுவினால் அவை சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களை அழிப்பதோடு, அதிகப்படியான வியர்வையையும் தடுக்கும். அல்லது குளித்தபின்பு, பஞ்சில் சிறிதளவு ஆப்பிள் சீடர் வினிகரை நனைத்து அக்குளில் தேய்த்து கொள்வதும் உடல்துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும். பல்வேறு நோய்களை போக்கவும், வலி நிவாரணியாகவும் பயன்படும் இந்த ஆப்பிள் சீடரை ஆன்லைனில் வாங்கிக்கொள்ளலாம். அரை லிட்டர் 500 ரூபாய்.

பேக்கிங் சோடா

குளித்த பின்பு, சிறிதளவு பேக்கிங் சோடாவை எடுத்து அக்குளில் தெளித்துக் கொண்டால், வியர்வை நாற்றம் வெளிவராமல் தடுக்க முடியும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்களுக்கும் உடலில் வியர்வை துர்நாற்றம் ஏற்படும். எனவே மலச்சிக்கல் ஏற்படாத வண்ணம் உடலை பராமரித்து வர வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் பழவகைகளை உணவாக எடுத்துக்கொள்வது செரிமானத்திற்கு இலகுவாக இருக்கும்.

தினமும் இருமுறை குளித்தல்

அதிக வியர்வை நாற்றம் உடையவர்கள், தினமும் இருமுறை குளிப்பது சிறந்தது.

அக்குள் பராமரிப்பு
அக்குளில் அதிகம் முடிவளர விடக்கூடாது. குறைந்தது 15 நாட்களுக்கு ஒரு முறையாவது முடிகளை நீக்கி விட வேண்டும்.

காற்றோற்றமான, தூய உடை
காற்று புக வழியில்லாத உடை என்றால், அதில் பாக்டீரியாக்கள் அதிகம் பெருகிவிடும். வியர்வையை உறிஞ்சாத பாலியஸ்டர், நைலான் துணிகளினால் ஆன உடைகளைத் தவிர்த்து, பருத்தியால் ஆன ஆடைகளை அணிய வேண்டும். அதோடு வியர்வை காய்ந்த துணிகளை துவைக்கப்பட்ட துணிகளோடு சேர்த்து வைக்கக்கூடாது. துவைத்த தூய்மையான உடைகளையே தினமும் அணிந்து வர வேண்டும்.

நல்ல உணவுகள்

வியர்வை துர்நாற்றத்திற்கு மற்றொரு முக்கிய காரணம், நம்முடைய உணவு முறையாகும். பூண்டு, மசாலா உணவுப்பொருட்கள், அளவுக்கதிமான அசைவ உணவு போன்றவைகள் உடல் வியர்வையில் நாற்றத்தை ஏற்படுத்தும். இதனால் இவற்றை தவிர்த்து, பச்சை காய்கறிகள், கீரைகள், அருகம்புல் சாறு போன்று குளோரோஃபில் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். குளோரோஃபில் உடலில் வியர்வை நாற்றம் ஏற்படாமல் இருக்கும்.

கோதுமைப்புல்

கோதுமைப்புல் (Wheatgrass) என்பது மிகச்சிறந்த ஆரோக்கிய மற்றும் மருத்துவத் தன்மைகளைக் கொண்டுள்ளது. நமது உடல் மிகச்சிறப்பாக இயங்குவதற்குத் தேவையான 19 அமினோ அமிலங்களும், 92 தாதுக்களும், இதில் உள்ளன. தினமும் வெறும் வயிற்றில் இதை உட்கொண்டு (500 மி.கிராம் அளவுக்கு உட்கொண்டு வந்தால்) குறிப்பிடத்தகுந்த அளவுக்கு உடல் வியர்வை துர்நாற்றத்தை கட்டுப்படுத்த முடியும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி! கணவரின் கண்முன்னே துடிதுடித்து இறந்த மனைவி:
Next articleகணவர் எடுத்த விபரீத முடிவு! இனி அவனை சந்திக்கமாட்டேன் என்ற வாக்குறுதியை மீறிய மனைவி!