வாய் துர்நாற்றம் வீசுதா? தினமும் காலையில் இத செய்யுங்க!

0

உங்களிடமிருந்து வெளிவரும் வாய் துர்நாற்றம் உங்கள் அருகில் இருப்பவர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தலாம். இதனால் நீங்கள் மற்றவர்களிடம் பேசுவதைக் கூட தவிர்த்து விடுவீர்கள். இந்த வாய் துர்நாற்றத்திற்கு தீர்வுதான் என்ன? வாருங்கள் பார்ப்போம்..

வாய் துர்நாற்றத்தைப் போக்க இதோ சிறந்த வழி ஒன்று உள்ளது. தினமும் சில மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களை வைத்து வாய் கொப்பளிப்பதன் மூலம், வாய் துர் நாற்றத்தைப் போக்கி விடலாம்.இதில் எந்த வித பக்க விளைவும் வரவே வராது. அவை என்ன? அவற்றைஎப்படி கொப்பளிக்க பயன்படுத்துவது என்று விளக்குகிறேன்.

வாய் துர்நாற்றத்திற்கு இயற்கையான மூலிகை மவுத் வாஷ் தயாரிப்பது எப்படி?

அந்த மூலிகைகள்,கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை ஆகும். இது உங்களின் வாய்வழி ஆரோக்கியத்திற்கும் ஒட்டுமொத்த உடலுக்கும் சிறந்தது. இந்த மூலிகை மவுத் வாஷ் உங்களின் வாயில் உள்ள நச்சுத்தன்மை மற்றும் பாக்டீரியாவை அழிக்கும். இலவங்கப்பட்டையின் அழற்சியை எதிர்க்கும் தன்மை மற்றும் க்ளோவ்ஸ் பாக்டீரியாவை நீக்கி நுரையீரலுக்கு புத்துணர்வை அளிக்கிறது. இதனால் உங்களின் வாய் துர்நாற்றப் பிரச்சனை நீங்குகிறது.

தேவையான பொருட்கள்:

* 1 ஸ்பூன் அரைத்தகிராம்பு

* 1 ஸ்பூன் இலவங்கப்பட்டை தூள்

* ஒரு முழு ஸ்பூன் மிளகுக்கீரை சாறு

செய்முறை:

ஒரு கப் தண்ணீரை மிதமான சூட்டில் கொதிக்க வைத்து, அதில் இலவங்கப்பட்டை தூள் மற்றும் கிராம்பு தூள் கலந்து, மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும், பிறகு அது குளிச்சியான நிலையை அடையும் வரை காத்திருக்கவும், பின்னர் அந்தக் கலவையை சல்லடையின் உதவியுடன் ஒரு தூய்மையான பாத்திரத்தில் வடிகட்டவும்,இப்போது இயற்கை மவுத் வாஷ் ரெடி. இதை அனுதினமும் பல் துலக்கிய பின் பயன்படுத்தலாம். மேலும், இந்த மவுத் வாஷ் கலவையை 8-10 நாள்கள் சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.

எச்சரிக்கை: உங்கள் ஈறுகள் மற்றும் பற்களில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், மருத்துவரிடம் பரிந்துரை பெற்ற பின்னரே இந்த இயற்கை மூலிகை மவுத் வாஷை பயன்படுத்த வேண்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article7 நாட்களில் 5 கிலோ எடை குறைக்க வேண்டுமா? இந்த பானத்தை குடியுங்கள்!
Next articleமதிய நேரம் அதிகமா தூங்கினால் இந்த ஆபத்து வரக்கூடும் ! எச்சரிக்கை !