லண்டனில்! இலங்கை பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை!

0

பிரித்தானியாவில் இருந்து இலங்கை ஆசிரியை ஒருவர் நாடு கடத்தப்படும் ஆபத்தில் உள்ளார் என அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதிகாரத்துவ சிக்கல் காரணமாக அவர் பிரச்சினைகளில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு லண்டனில் வசிக்கும் இலங்கையரான மல்காந்தி ஜயசிங்க என 46 வயதுடைய ஆசிரியையே இவ்வாறு நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளார்.

யாராவது கதவைத் தட்டுகின்ற ஒவ்வொரு நொடியும் குடிவரவாளர் மையத்திற்கு அழைத்துச் செல்வதற்கு ஒருவர் வருவார் என அச்சப்படுவதாக குறித்த ஆசிரியை குறிப்பிட்டுள்ளார்.

கணித ஆசிரியர்கள் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில், இந்த ஆசிரியை நாடு கடத்தப்படுவது முட்டாள்தனமான செயல் என ஆசிரியை ஜயசிங்கவுக்கு பயிற்சியளித்த ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஆசிரியையாக பணியாற்ற தகுதி பெற்ற ஜயசிங்க 2008ஆம் ஆண்டு முதல் முறையாக லண்டன் சென்றுள்ளார்.

Middlesex பல்கலைக்கழகத்தில் பல்வேறு பட்டப்படிப்புகளை தனது சொந்த செலவில் அவர் நிறைவு செய்தார். அதனை தொடர்ந்து Tottenham UTC இல் கணித ஆசிரியராக அவர் பணி புரிந்தார்.

Tottenham UTC கடந்த ஆண்டு மூடப்பட்டது, ஜயசிங்க பணியில் இல்லை என்பதனால் உள்துறை அலுவலகம் அவரது கடவுச்சீட்டை கைப்பற்றியது.

பின்னர் அவர் பணி புரிவதற்கு ஆங்கில பயிற்சி நெறி ஒன்றை நிறைவு செய்ய வேண்டும் என கூறப்பட்டது. எனினும் அதற்கு கடவுச்சீட்டுக்கு தேவையாக உள்ள போதிலும் அதிகாரிகள் அதனை வழங்க மறுத்துள்ளனர்.

இந்நிலையில் எந்த நேரத்தில் மல்காந்தி ஜயசிங்க நாடு கடத்தப்படலாம் என குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅதிர்ச்சியில் ரசிகர்கள்! சிவகார்த்திகேயனால் நடிகர் சூர்யாவுக்கு வந்த சோதனை!
Next articleயாரும் பார்த்திடாத அரிய புகைப்படம்! பின்னணி இல்லாமல் நுழைந்த நடிகருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!