ரூபாவின் பெறுமதி இலங்கை வரலாற்றில் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது!

0
348

இலங்கையில் வரலாற்றில் அமெரிக்க டொலருக்கு எதிராக மிக மோசமான முறையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்திற்கமைய டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 168.12 ரூபாவாக பதிவாகியுள்ளது. டொலர் ஒன்றின் விற்பனை விலை 171.99 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை டொலரின் விற்பனை விலை 171.67 ரூபாவாக பதிவாகியிருந்தது.

ரூபாவின் பெறுமதியை நிலையான பெறுமதியில் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கி கடுமையான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அது சாத்தியப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Previous articleஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் _ சீரற்ற காலநிலை தொடர்பில் விசேட அறிவிப்பு!
Next articleவவுனியாவில்! மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி!