அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் _ சீரற்ற காலநிலை தொடர்பில் விசேட அறிவிப்பு!

0

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்படும் திடீர் அனர்த்தம் தொடர்பில் அறிவிப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அவசர இலக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய 117 என இலக்கம் 24 மணித்தியாலமும் சேவையில் உள்ளதாக நிலையம் அறிவித்துள்ளது.

மன்னார், புத்தளம், கொழும்பு, காலி, மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் கடும் காற்றுடன் மழை பெய்யும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக மீனவர்கள், கடல்துறைசார் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானம் செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக மலையக பகுதியில் அடைமழை பெய்தால் மண்சரிவு ஆபத்துக்கள் உள்ளதாகவும், இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு நிலைமைக்கும் முகம் கொடுப்பதற்கு அனைத்து மாவட்டங்களிலும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமுக்கிய அறிவித்தல்! கொழும்பு வாழ் மக்களுக்கு!
Next articleரூபாவின் பெறுமதி இலங்கை வரலாற்றில் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது!