ராஜ நாகம் என்று அழைக்கப்படும் இந்த வகைப்பாம்பானது நச்சுப்பாம்பு வகைகளில் மிக நீளமானதாக கருதப்படுகிறது. பொதுவாக அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வாழும் இந்த வகை பாம்புகள், மற்ற பாம்புகளையே பெரும்பாலும் உணவாக உட்கொள்கின்றன.
இவை ஒரு முறை உணவை உட்கொண்டால், அதன் பிறகு பலநாட்கள் உணவு இல்லாமலேயே உயிர் வாழும் தன்மை கொண்டவை. கருநாகத்தின் நஞ்சானது மிகவும் கொடியது. ஒரே கடியில் தனது விஷத்தின் மூலம் மனிதனைக் கொல்லும் திறன் வாய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஆச்சர்யமளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது, ராஜநாகம் ஒன்று முன்னதாக இரையாக உட்கொண்ட மற்றொரு பாம்பை கக்குகிறது. ஆனால், ராஜநாகத்தின் வயிற்றில் இருந்து வெளிவந்த அந்த பாம்பு உயிருடன் இருந்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.