மருத்துவர்களின் அலட்சியம்! ஐ லவ் யூ அப்பா என கூறியபடி உயிரிழந்த அழகான சிறுமி! பின்னணி என்ன!

0

பிரித்தானியாவில் 5 வயது சிறுமிக்கு சாதாரண வைரஸ் தொற்று இருப்பதாக மருத்துவர்கள் தவறாக கணித்த நிலையில் அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஸ்டீவன் மூர் என்பவர் தனது மனைவி மற்றும் 5 வயது மகளான எல்ஸ்பெத் மூர் உடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்தாண்டு ஜூலை மாதம் சிறுமி எல்ஸ்பெத்துக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதுடன், வயிறு எரிவது போன்ற உணர்வும் ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக எல்ஸ்பெத்தின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், எல்ஸ்பெத்துக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறி சில மருந்துகளை கொடுத்து அனுப்பினார்கள்.

ஆனால் தொடர்ந்து அவருக்கு வயிற்றில் பிரச்சனை இருந்து கொண்டே இருந்தது.

சில நாட்கள் கழித்து கடுமையான வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட எல்ஸ்பெத்தை மீண்டும் அவர் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், இதயத்துடிப்பு அதிகமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட எல்ஸ்பெத்தின் உடல்நிலை மிகவும் மோசமானது.

ஜூலை 5ஆம் திகதி இரவு தொடர்ந்து வாந்தி எடுத்த எல்ஸ்பெத் தனது தந்தையை அருகில் அழைத்து ஐ லவ் யூ அப்பா என கூறியுள்ளார்.

பின்னர் தொண்டை வலிப்பதாக அவர் கூறிய நிலையிலேயே அப்படியே மயங்கியுள்ளார்.

இதையடுத்து பதறிய பெற்றோர் எல்ஸ்பெத்தை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அப்போது தான் சிறுமி எல்ஸ்பெத்துக்கு குடல்வால் அழற்சி நோய் இருந்ததும் அதை மருத்துவர்கள் கண்டுபிடிக்க தவறியதும் தெரியவந்தது.

இதையடுத்து தனது மகள் மரணத்துக்கு குறித்த மருத்துவமனை தான் காரணம் என ஸ்டீவன் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு விசாரணை தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நடந்த அனைத்தையும் ஸ்டீபன் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட மருத்துவமனை இன்னும் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleராஜநாகத்தால் உணவாக உட்கொள்ளப்பட்ட மற்றொரு பாம்பு! உயிருடன் வெளிவந்த அதிசயம்! வீடியோ!
Next articleஆசையுடன் குழந்தையை தூக்கிய தோனி! வீறிட்டு அழுத குழந்தை, பின்னர் நடந்த சுவாரஷ்யங்கள்! வைரலாகும் வீடியோ!