ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 மீனம் !

0

எல்லாருக்கும் எல்லா சமயங்களிலும் மற்றவர்களுக்கு உதவிகரமாக திகழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மீன ராசி நேயர்களே! தற்போது ஏற்பட உள்ள ராகு கேது பெயர்ச்சி மூலம் வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் 13-02-2019 முதல் 01-09-2020 வரை ராகு ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டிலும், கேது ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. சனி 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பாகும். உங்கள் ராசியாதிபதி குருபகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆகும்.

கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்வர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது-. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் ஏற்படும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். வரும் 29-10-2019 முதல் குருபகவான் ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனம் தேவை. ஆன்மீக தெய்வீக தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கையில் இருக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் காத்துக் கொள்வது நல்லது. கூட்டாளிகளும், வேலையாட்களும் ஒற்றுமையுடன் செயல்படமாட்டார்கள். முடிந்தவரை அனைவரையும் அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். வேலைபளு அதிகமாக இருப்பதால் உடல்நிலை சோர்வடையும். எடுக்கும் பணிகளை திறம்பட செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும். எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாக கூடிய காலம் என்பதால் பயணங்களை தவிர்க்கவும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைப்பதில் தாமதநிலை ஏற்படும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரண கோளாறு போன்றவை தோன்றும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலும் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களால் கடந்த காலத்தில் ஏற்பட்ட மருத்துவ செலவுகள் குறையும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாக கூடிய காலம் என்பதால் பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படும்.

குடும்பம் பொருளாதாரநிலை
பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை நிலவினாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் உற்றார் உறவினர்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பு வெற்றி பெற முடியும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள்.

உத்தியோகம்
பணியில் நிம்மதியற்ற நிலையிருக்கும். எதிலும் திறம்பட செயல்பட முடியாத நிலை ஏற்படும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும், உத்தியோக உயர்வுகள் கிடைக்கப் பெற்று ஓரளவுக்கு மனமகிழ்ச்சி உண்டாகும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும், பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். வேலைபளு அதிகமாக இருக்கும்.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கப் பெற்றாலும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் லாபம் குறையும். உடனிருப்பவர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பையும் பெற முடியாமல் போகும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து நிதானமுடன் செயல்பட்டால் லாபம் காண முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.

கொடுக்கல்- வாங்கல்
பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். வாங்கிய பணத்தை திருப்பித் தருவதில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்ததை கேட்டால் அடுத்தது பகையாக மாறும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.

அரசியல்
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதால் உங்கள் பதவிக்கு பங்கம் ஏற்படாது பார்த்து கொள்ள முடியும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டி வருவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வாக்குறுதிகள் கொடுக்கும் போது சிந்தித்து செயல்படவும். பத்திரிக்கை நண்பர்களை பகைத்து கொள்ளாது இருப்பது உத்தமம்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். நவீன முறைகளை கையாண்டு விளைச்சலைப் பெருக்க முடியும் என்றாலும் வேலைக்கு தக்க சமயத்திற்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். இதனால் செய்யும் தொழிலில் சுனக்கம் ஏற்படும். அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கும். நீர் வரத்து சிறப்பாகவே இருக்கும். பங்காளிகளை பகைத்து கொள்ளாமல் இருப்பது தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

கலைஞர்கள்
எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் கிடைத்த வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்து கொள்வது நல்லது. வரவேண்டிய பணத்தொகைகளில் சற்று இழுபறி நிலை ஏற்பட்டாலும் வரவேண்டிய நேரத்தில் வந்து சேரும். உடனிருப்பவர்களிடம் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சுகவாழ்வு சிறப்பாக அமையும். கார், பங்களா வாங்கும் விஷயங்களில் சற்று கடன்கள் ஏற்படும்.

பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். குடும்ப பிரச்சினைகளை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ளாதிருக்கவும். மணவயதை அடைந்தவர்களுக்கு தடைகளுக்குப் பின் மணமாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

மாணவ மாணவியர்
மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடிய காலமிது என்பதால் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. கல்வி ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் தடைளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். விளையாட்டுப் போட்டிகளின் போது சற்று கவனமுடன் செயல்படுவது, தேவையற்ற நட்புக்களை தவிர்ப்பது நல்லது.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-02-2019 முதல் 16-04-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 4-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், ஜென்ம ராசிக்கு 10-ல் கேது உத்திராட நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது சுமாரான அமைப்பு என்றாலும் குரு 9-ல் சஞ்சாரம் செய்வதால் நினைத்ததெல்லாம் நிறைவேறும். உங்களுக்கிருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். பணவரவுகள் சரளமாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருக்கும் கடன் பிரச்சினைகள் யாவும் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் அமையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும்.

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் உண்டாகாது. உற்றார் உறவினர்களிடையே வாக்கு வாதங்கள், கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் சாதகப் பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைய முடியும். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நற்பலனை உண்டாக்கும்.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 17-04-2019 முதல் 20-08-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 4-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், ஜென்ம ராசிக்கு 10-ல் கேது பூராட நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது சுமாரான அமைப்பு என்றாலும் குரு 9-ல் சஞ்சாரம் செய்வதால் பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற உயர்வுகள் கிடைக்கும். திறமைகள் பாராட்டப்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு உடனிருப்பவர்களின் சாதகமான செயல்பாடுகளால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உடல் ஆரோக்கித்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். கணவன்- மனைவியிடையே வாக்குவாதங்கள் தோன்றும் என்றாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும்.

ஆடை, ஆபரணம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். பணவரவுகள் சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். பேச்சில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் சற்றே விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். மாணவர்கள் அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் ஆசிரியர்களின் ஊக்குவிப்பால் முன்னேற்றம் அடைவார்கள். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 21-08-2019 முதல் 24-12-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 4-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், ஜென்ம ராசிக்கு 10-ல் கேது பூராட நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது சுமாரான அமைப்பு என்றாலும் குரு 9-ல் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் சற்றே குறையும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமையை நிலை நாட்ட முடியும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பொன், பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். 29-10-2019 முதல் குரு 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும்.

புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் ஏற்பட்டாலும் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையும் உயர்வும் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதுடன் விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்குவார்கள்.- சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 25-12-2019 முதல் 20-05-2020 வரை

ராகு கேது ஜென்ம ராசிக்கு 4, 10-ல் தன் சொந்த நட்சத்திரத்திரங்களில் சஞ்சரிப்பதும் குரு, சனி 10-ல் சஞ்சாரம் செய்வதும் சுமாரான அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைப்பதால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது உத்தமம். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும்.

சில நேரங்களில் நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் மற்றவர்களுக்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும் என்பதால் எதிலும் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை கடனாக கொடுக்கும் போது சிந்தித்து செயல்படுவது உத்தமம். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் விரயங்கள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே முன்னேற வேண்டியிருக்கும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மாணவர்கள் கல்விக்கான சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். சர்பசாந்தி செய்வதால் நற்பலன்களை பெற முடியும்.

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 21-05-2020 முதல் 01-09-2020 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 4-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், ஜென்ம ராசிக்கு 10-ல் கேது மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும் குரு, சனி 10-ல் சஞ்சாரம் செய்வதும் சுமாரான அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் ஓரளவுக்கு நற்பலனை அடைய முடியும்.

பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள் என்பதால் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் ஓரளவுக்கு அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைபளு அதிகரித்தாலும் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களால் மன நிம்மதி உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற சகவாசங்களை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம். குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது, சனிக்கு பரிகாரம் செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9,

கிழமை – வியாழன், ஞாயிறு

திசை – வடகிழக்கு

நிறம் – மஞ்சள், சிவப்பு

கல் – புஷ்ப ராகம்

தெய்வம் – தட்சிணாமூர்த்தி

பரிகாரம்

மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராகு 4-லும் கேது 10-லும் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது. ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் சஹ ராஹவே நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறி வருவது நல்லது. முடிந்த வரை விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறிவருவது. செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது. கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை தானம் தருவது நல்லது.
உங்களுக்கு சனி பகவான் 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சனிக்கிழமைகளில் வெங்கடாசலபதியை வழிபடுவது, அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, சனிக்கிழமைகளில் விரதமிருந்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது, சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் சருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது அனுமன் துதிகளை கூறுவது நல்லது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 கும்பம் !
Next articleஇன்று வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரங்க யார்! இன்றைய ராசிப்பலன்-16.02.2019!