ரயிலில் மோதுண்டு 17 வயது மாணவன் பலி! வவுனியாவில் சம்பவம்!

0
434

வவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளில் ரயிலில் மோதுண்டு 17 வயதுடைய பாடசாலை மாணவனொருவன் உயிரிழந்துள்ளார்.

கற்குழியில் வசித்து வரும் குறித்த பாடசாலை சுபலோசன் என்ற மாணவன் நேற்றைய தினம் குடும்பத்தாருடன் சிறு கருத்து முரண்பாட்டில் ஈடுபட்டு வீட்டை வீட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.

பின்னர் வவுனியா தேக்கவத்தை பகுதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தபால் புகையிரதத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இவர் சில தினங்களாக தற்கொலைக்கு முயற்சித்ததாக இவரின் நண்பர்கள் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் தற்போது வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஎன்னோட அம்மா மாதிரி நீ! நடு ரோட்டில் பொலிசாரின் பாசத்தைக் கண்டு கலங்கிய இணையவாசிகள்!
Next articleகனடாவில் புதிய சட்டம்!