கனடாவில் புதிய சட்டம்!

0

கண்டாவின் Ontarioவில் முழு நேரப் பணியாளர்களைப்போலவே பகுதி நேரப்பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்கும் புதிய சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.

பகுதி நேர பணியாளர்கள், தங்களுக்கு வேலை இருக்கும்போது மட்டும் வேலை செய்யும் பணியாளர்கள், மற்றும் ஆண்டொன்றிற்கு 120 நாட்கள் மட்டும் வேலை செய்யும் பணியாளர்கள் ஆகிய அனைத்துவகை பணியாளர்களுக்கும், முழு நேர பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் போலவே ஊதியம் வழங்கும், “ஒரே மாதிரியான வேலைகளுக்கு ஒரேமாதிரி யான ஊதியம்” என்னும் சட்டம் Ontarioவில் அமுலுக்கு வந்துள்ளது.

இந்த புதிய விதிகள் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளன. ஒரு மணி நேரத்திற்கு 14 டொலர்கள் ஆக ஊதியத்தை உயர்த்திய அதே சட்டத்தின்கீழ்தான் இந்த மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின்படி பணி வழங்குவோர், ஒரே மாதிரியான வேலையைச் செய்யும் முழு நேரபணியாளர்களுக்கு வழங்கப்படுவதைவிட குறைவான ஊதியத்தை பகுதி நேர பணியாளர்களுக்கு வழங்க முடியாது.

இந்த சட்டம், அனுபவம், கல்வித் தகுதி மற்றும் தயாரிக்கப்படும் பொருளின் தரம் அல்லது அளவின் அடிப்படையில் வருவாயை அளவிடும் அமைப்பு ஆகியவற்றிற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கிறது.

கடந்த 40 ஆண்டுகளில் மட்டும் மொத்த வேலை வாய்ப்பில் 20 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்துள்ள பகுதி நேர பணியைக் கருத்தில் கொண்டு, தற்காலிக பணியாளர்களைபாதுகாக்கும் நோக்கில் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகளின்படி முழு நேர பணியாளர்களுக்கு இணையாக தங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று கருதும் பணியாளர்கள் அது குறித்து தங்களுக்கு பணி வழங்குவோரிடம் விளக்கம் கோரலாம்.

பணி வழங்குபவர் ஊதியத்தை முறைப்படுத்த வேண்டும் அல்லது ஊதிய வேறுபாட்டிற்கான விளக்கத்தை கொடுக்க வேண்டும்.

இந்த விதி தங்கள் ஊதியம் குறித்து கேட்பதாலோ அல்லது பிற பணியாளர்களின் ஊதியம் குறித்து கேட்பதாலோ நிர்வாகத்தால் பழி வாங்கப்படுவதிலிருந்தும் பணியாளர்களை பாதுகாக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளாக பணியாளர்களை ஏமாற்றி வந்த தற்காலிக உதவி ஏஜன்சிகள் இனி ஒழுங்காக தனது பணியாளர்களுக்கு முழு நேரப் பணியாளர்களைப் போலவே ஊதியம் வழங்க வேண்டியிருக்கும்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleரயிலில் மோதுண்டு 17 வயது மாணவன் பலி! வவுனியாவில் சம்பவம்!
Next articleகணவரை ஏமாற்றி சொத்துக்களை அபகரித்து கொண்ட மனைவி: நடுரோட்டுக்கு வந்த கணவன்!