ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும் சிறந்த உணவு இது தான்!

0

உலகம் முழுவதும் உள்ள வெப்ப மண்டல பகுதிகளில் கத்தரிக்காய் பயிரிடப்படுகிறது.

• ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதில் கத்தரிக்காய் முக்கியப் பங்கு வகிக்கிறது.

• 100 கிராம் கத்தரிக்காயில் 24 சதவிதம் கலோரிகள், 9 சதவிதம் நார்ச்சத்து உள்ளது.

• அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் திரவப் பொருள் உள்ளது.

• ஆந்தோசயான் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய்எதிர்ப்புப் பொருளாகும்.

• “பி’ காம்ப்ளக்ஸ் வகையான வைட்டமின்களான பான்டோதெனிக் ஆசிட், பைரிடமாக்சின், தயமின் மற்றும் நியாசின் ஆகிய உயிர்ச்சத்துகளும் கத்தரிக்காயில் அடங்கியுள்ளன.

• மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் உள்ளன.

எப்போதுமே சமையலுக்கு பிஞ்சு கத்தரிக் காய்கள் தான் சிறந்தவை. முற்றிய கத்தரிக்காயை அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கு வரும். தற்காலத்தில் விதையே இல்லாத கத்தரிக்காய்களையும் கண்டுபிடித்து உள்ளனர். இதைக் கொண்டு சீக்கிரம் சமையல் செய்து விடலாம்.

கத்திரிக்காய்களில் தசைக்கும், ரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போன்ற பிரச்சினைகள் அகன்று விடும். அதனால் தான் பத்திய வைத்தியத்தில் இந்தக் காய் முக்கிய இடம் வகிக்கிறது. அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் கத்தரிக்காயை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

• கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் உடற்செயலின் மாற்றங்களுக்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் மிகவும் உகந்தவை.

கத்தரிக்காய் காய்கறியாக பாவிக்கப்பட்டாலும் உண்மையில் இது பழ வகையைச் சார்ந்ததாகும். இது வெள்ளை, ஊதா, கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது. மேலும் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது. வைட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கில் ஏற்படும் அலர்ஜியினைப் போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.

வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று. கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது.

முற்றிய பெரிய காய்களைச் சாப்பிட்டால் உடம்பில் அரிப்பு ஏற்படும். குறிப்பாக, வீட்டிலே வளர்த்துப் பிஞ்சாகப் பறித்துச் சாப்பிட வேண்டிய காய்களுள் இதுவும் ஒன்றாகும். தக்காளிக்கு இணையானது, இக்காய். தக்காளியைப் போலவே எடை, புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் முதலியன கத்தரிக்காயில் உள்ளன. ஆனால் வைட்டமின் ‘ஏ’யும், வைட்டமின் ‘சி’யும் குறைவாகவே உள்ளன.

இவற்றை ஈடுசெய்யும் வகையில் வைட்டமின் ‘பி’ தக்க அளவில் உள்ளது. இதனால் நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் உடனடியாகச் சிதைந்து சத்தாக மாறக் கத்தரிக்காயில் உள்ள வைட்டமின் ‘பி’ பயன்படுகிறது. பாரிச வாயுநோய் தடுக்கப்படுகிறது. பசியின்மை அகற்றுகிறது. உடல் சோர்வடைவதை குறைக்கப்படுகிறது. மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது முதலியவையும் தடுக்கப்படுகிறது.

முற்றிய காய்கள் உடல் வளர்ச்சிக்குப் பயன்படும். காரணம், இவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் இருக்கிறது. ஆனால், அளவாகத்தான் பயன்படுத்தவேண்டும். இதனால் கண்பார்வைத் திறனும் அதிகரிக்கும். உடலுக்கு சூடு தரும் காய்கறி இது. எனவே, மழை நேரத்தில் கூட இரவு நேரத்தில் உடல் கதகதப்பாய் இருக்கக் கத்தரிக்காய் குழம்பு சமைத்து உண்ணலாம்.

கத்தரி வற்றலும் உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். நீர்க்கனத்தைக் குறைக்கும். உடல் பருமனைக் குறைக்கும். உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காயைத் தவிர்ப்பது நல்லது. உடலுக்குச் சூடு தரும் காய் என்பதால் அரிப்பை உண்டு பண்ணிப் புண்கள் ஆற அதிக நாள் ஆகும்.

மற்றவர்கள் மருந்தைப்போல் கத்தரிக்காயை உணவில் சேர்த்து உடலுக்கு நன்மை பெற வேண்டும். இக்காய் இளம் பிஞ்சாய் இருந்தால், சமையலில் சேர்த்து நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் விரைந்து சிதைந்து சத்தாக உடலுக்குக் கிடைக்க இது பயன்படும். வீட்டில் நன்கு உரமிட்டு வளர்க்கப்படும் கத்தரிச்செடியில் உள்ள பிஞ்சு உடலுக்கு வளத்தையும் வலிமையையும் தவறாமல் தரும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபாதத்தில் எரிச்சல், நீர்பினிசம், ரத்த அழுத்தம், உடல் உஷ்ணம், ரத்தக்கட்டு என்பவற்றுக்கு சிறந்த மருந்துவம்!
Next article29.10.2018 இன்றைய ராசிப்பலன் – ஐப்பசி 12, திங்கட்கிழமை!