யாழ்ப்பாணத்தில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் மீது நேற்று கொடூரமான முறையில் கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை, வீமன்காமத்தைச் சேர்ந்த 31 வயதுப் பெண் ஒருவர் மீதே கொலை வெறித்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடன் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முரண்பாடு வன்முறையாக மாறி, கர்ப்பிணிப் பெண் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான கர்ப்பிணிப் பெண் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வயிற்றில் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளமையினால் வைத்தியர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.




