மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி?

0

ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக இருந்த மூத்த அரசியல் தலைவர் கலைஞர் வயது மூப்பின் காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலிவடைந்து போய் உள்ளார்.

அதிலும் கடந்த சில தினங்களாக உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கட்சி பேதமின்றி அனைத்துக்கட்சி தலைவர்களும் காவேரி மருத்துவமனை வந்து நலம் விசாரித்து சென்றனர்.

இந்நிலையில் கலைஞரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று காவேரி மருத்துவமனை அறிவித்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

கலைஞரின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக உள்ளது என்றும், தொண்டர்களின் இத்தகையை கோரிக்கையை அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெரினாவில் கலைஞரின் உடலை நல்லடக்கம் செய்ய ஸ்டாலின் தரப்பில் இருந்தும் அனுமதி கோரப்பட்டதாம்.

முதல்வர் ஓபிஎஸ், துணை முதல்வர் ஈபிஎஸ் இருவரும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், டிடிவி தினகரனும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனினும் அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், இதனால் இழுபறியில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமாநில அரசுக்கு அதிரடி உத்தரவிட்ட மோடி! கருணாநிதிக்கு இப்படி ஒரு மரியாதை கொடுக்க வேண்டும்!
Next articleகருணாநிதியின் தாய், தந்தையை பார்த்துள்ளீர்களா, இதோ!