Home thatstamil one india tamil oneindia tamil ulaga seithigal மூன்று மாதம் பகல் மூன்று மதம் இரவு! வியக்க வைக்கும் அதிசய தீவு! எங்கு தெரியுமா!

மூன்று மாதம் பகல் மூன்று மதம் இரவு! வியக்க வைக்கும் அதிசய தீவு! எங்கு தெரியுமா!

0
475

நார்வே நாட்டில் உள்ள ஒரு தீவில் கடந்த ஒரு மாதமாக பகல் பொழுது மட்டுமே நிலவி வருகிறது.

சூரியன் மறையாத இந்தத் தீவை அப்பகுதி மக்கள் ‘கோடைத்தீவு’ என்றே அழைக்கின்றனர். இந்தப் பகல் காலம் ஜூலை 26-ம் தேதி வரை தொடரும் என்கிறனர் அறிவியல் ஆய்வாளர்கள். இதேபோல், இந்தத் தீவில் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலக்கட்டத்தில் சூரியனே உதிக்காதாம்.

சூரியன் உதிக்காத மூன்று மாத காலத்தை ‘நீண்ட போலார் இரவுகள்’ என்று அழைக்கின்றனர் நார்வே மக்கள். இந்தத் தீவில் சுமார் 300 மக்கள் வசிக்கின்றனர். நீண்ட பகல், நீண்ட இரவு கொண்ட இந்தத் தீவை ‘கால நேரம் அற்ற தீவு’ என்று அரசு அறிவிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கையெழுத்து கோரிக்கை வைத்துள்ளனர்.

இதன் மூலம் இம்மக்களுக்கு பள்ளி, கல்லூரி, அலுவலக நேர விதிமுறைகளில் தளர்வு கிடைக்கும். இதனாலே நார்வே நாடாளுமன்றத்துக்கு இந்தக் கோரிக்கையை கொண்டு செல்கின்றனர் அந்தத் தீவின் மக்கள்.

Previous articleபிக்பாஸ் வீட்டில் கமலுடன் ரஜினி! வெளியானது பிக்பாஸ் வீட்டின் புகைப்படங்கள்!
Next articleபிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த போட்டியாளர்! அஜித்துடன் நடித்த நடிகை!