Home Patti Vaithiyam மூட்டு வலிகள் மற்றும் உடல் வலிகள் பஞ்சாய்ப் பறந்தோட வேண்டுமா? அப்போ நல்லெண்ணையை இப்படி செய்து...

மூட்டு வலிகள் மற்றும் உடல் வலிகள் பஞ்சாய்ப் பறந்தோட வேண்டுமா? அப்போ நல்லெண்ணையை இப்படி செய்து மசாஜ் செய்யுங்கள்!

0
1098

நமது மரபில் காலா காலமாக நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கமாக பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் இந்த முறையை யாரும் இப்போது பின்பற்றுவது இல்லை. இதனால் பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகள், நோய்கள் என எதிா்கெள்ள வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

பெண்கள் குறிப்பாக வெள்ளிக்கிழமையிலும், ஆண்கள் சனிக்கிழமையிலும் எண்ணெய் குளியல் மேற்கொள்ள வேண்டும் என்று பொியவா்கள் சொல்வார்கள். அந்த நல்லெண்ணெயில் பூண்டு, மிளகு, சீரகம் மற்றும் சுக்கு ஆகியவற்றை சேர்த்து, வெதுவெதுப்பாக சூடேற்றி,கைபொறுக்கும் சூட்டில் தலை முதல் பாதம் வரை தேய்த்து மசாஜ் செய்த பின் சிறிது நேரம் கழித்து நீராட வேண்டும்.

நல்லெண்ணெய் குளியலை தொடர்ந்து வாரா வாரம் செய்து வந்தால் மூட்டுக்கள், மூட்டு வலிகள் மற்றும் உடல் வலிகள் பஞ்சாய்ப் பறந்தோடி விடும். இதனை செய்யாமல் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொண்டிருக்கிறோம்.

பொியவா்கள், குழந்தைகள் என எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டிவிடுவதால், கண்பார்வை நன்றாக இருக்கும். உடல் சூட்டை தணிக்கும். குழந்தைகளின் வளர்ச்சியில் நம்ப முடியாத மாற்றத்தையும் காணமுடியும்.

மசாஜ் செய்வதால் மனித உடலில் உள்ள இரத்த நாளங்கள் தூண்டப்பட்டு ரத்தத்திலிருந்து செரிமானம் ஆன புரதத்தை செல்களுக்கு வேகமாக அனுப்புகிறது. இதன் காரணமாகவே வளர்ச்சி தூண்டப்படுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க இது உதவுகிறது.

தூக்கமின்மையால் அவஸ்தைப்படுபவர்கள், வாரா வாரம் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால், தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபட்டு,நிம்மதியான நல்ல தூக்கத்தைப் பெறலாம்.

By: Tamilpiththan

Previous articleஇது விந்துவைக் குறைக்கும் தன்மை கொண்டது ஆண்கள் சாப்பிடாதீர்கள் ! ஆனால் பெண்களுக்கு இந்த நோய்கள் குணமாகும் !
Next articleஉங்கள் சருமத்தை இளமையாக மின்ன வைக்கும் மோர்! அவசியம் ட்ரை பண்ணுங்க!