மூட்டுவலியால் தொல்லையா ? அப்ப நெல்லிக்காயை இப்படி சாப்பிடுங்க!

0

தினசரி உணவில் நெல்லிக்காயை சேர்த்துக்கொண்டால் நூறு ஆண்டுகள் வரை இளமையுடன் வாழலாம் என்று சித்தர்கள் தங்களின் குறிப்புகளில் எழுதி வைத்துள்ளனர். உடல் நலத்திற்கு ஏற்ற நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது.

உயிர்ச்சத்துக்களான ஏ,பி,சி என்ற மூன்றும் அடங்கியுள்ளன. சாத்துக்குடிச் சாற்றில் உள்ள வைட்டமின் சத்து 20 மடங்கு இதில் உள்ளது. அன்றாடம் உட்கொள்ளும் நெல்லிக்காயானது அருமருந்தாகும். இது வாதம், பித்தம், கபம், என்னும் திரிகரண தோஷங்களையும் போக்கவல்லது.

இதனாலேயே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதன் பெருமை பற்றி ஆயுர்வேத சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது.

நெல்லிக்காயில் உள்ள விட்டமின் ’சி’ ரத்தத்தை சுத்திகரித்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மூளை சம்பந்தமான நோய்களையும் குறைக்கிறது.
ஒரு நாளைக்கு 5 -6 நெல்லிக்காய்களை ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வர நாள்பட்ட சளி குணமாகும். இளநரை மாறும். ஞாபகசக்தி அதிகரிக்கும்.
நெல்லிக்காயை தொடர்ந்து உட்கொண்டால் கண்பார்வை தெளிவாகும்.
நெல்லிக்காயை சர்க்கரையுடன் சாப்பிட்டு வர சிறுநீருடன் இரத்தம் வருவது சரியாகும்.
நெல்லிக்காயை உப்புடன் சாப்பிட வாந்தி, அஜீரணம், மூட்டு வலி போன்றவை குணமாகும். நல்ல பசியும் எடுக்கும்.

பல்லில் ஏற்படும் பயோரியா என்னும் வியாதிக்கு இது அருமருந்து. நெல்லியிலைச் சாற்றை கொப்பளித்து காயை உட்கொண்டால் உடன் வியாதி நீங்கும்.
நெல்லிக்காய் இரும்புச்சத்து உள்ளது. இரத்தத்தைச் சுத்தஞ்செய்து இருதயத்தை வலுப்படுத்தும். எனவே கர்ப்பிணிகள் முதல் மாதம் முதல் 9 மாதங்கள் வரை காலை, மாலை, ஒரு நெல்லிக்காய் அல்லது நெல்லி முள்ளி உட்கொண்டால் அடிக்கடி வரும் வாந்தி நிற்கும்.
பிறந்த குழந்தைகளின் உணவில் நெல்லிக்காய் சாற்றினைக் கொடுத்து வந்தால் வளரும் குழந்தைகள் தேக ஆரோக்கியத்துடன் திகழ்வார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசோற்று கற்றாழையுடன் மோர் சேர்த்தால் கிடைக்கும் நன்மைகள்!
Next articleபுற்று நோயை தடுக்கும் சக்தி கொண்ட வைக்கோல் காளான்!