Home Patti Vaithiyam முட்டையின் வெள்ளை பகுதியை சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா!

முட்டையின் வெள்ளை பகுதியை சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா!

0
453

நாம் அனைவரும் விரும்பி உண்ணும் உணவுகளில் முக்கியமானது தான் முட்டை.

என்னதான் எண்ணற்ற நன்மைகள் முட்டையின் வெள்ளை பகுதியினால் கிடைத்தாலும், இவற்றால் சில பாதிப்புகளும் இருக்கின்றன என சொல்லப்படுகின்றது.

தற்போது முட்டையின் வெள்ளை கருவை சாப்பிடுவதனால் ஏற்படும் உடல் கோளாறுகளை பற்றி பார்ப்போம்.

முட்டையின் வெள்ளை பகுதியிலுள்ள ஆல்புமின் என்கிற புரதசத்து சிலரின் உடலில் ஒவ்வாமையை உண்டாக்குகின்றன. முக்கியமாக வயிற்று போக்கு, வாந்தி, மயக்கம் முதலிய பாதிப்புகள் இதனால் ஏற்படுகின்றன.

முட்டையின் வெள்ளை கருவை சாப்பிடுவதால் ஆபத்துகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமே.சால்மோனெல்லா என்கிற பாக்டீரியா முட்டையின் வெள்ளை பகுதியில் அதிக அளவில் காணப்படுகின்றன. ஆதலால், இதை நன்றாக சமைத்து சாப்பிடவில்லை என்றால் குடல் சார்ந்த பிரச்சினைகள் கூட ஏற்படும்.

முட்டையின் வெள்ளை பகுதியிலுள்ள அதிக அளவிலான புரதசத்து தான். 0.6 – 0.8 கிராம் அளவிலான புரதசத்து தான் ஒரு நாளைக்கு போதுமானதாக இருக்கும். அதற்கு மீறி சாப்பிட்டால் சிலருக்கு சிறுநீரக பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

முட்டையின் மஞ்சள் கரு அதிக ஊட்டசத்துக்கள் கொண்டவை தான். என்றாலும், இதில் கொலட்ஸ்ரால் அளவு அதிகமாக உள்ளது. இதனால் இதயம் சார்ந்த பாதிப்புகளும் இதனால் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன.

மஞ்சள் கருவை சாப்பிடுவதால் இரத்த ஓட்டம் சிலருக்கு பாதிக்க கூடும். குறிப்பாக இதய நோய்கள் உள்ளவர்களுக்கு இதன் தாக்கம் அதிகம். இதன் விளைவாக உயர் இரத்த அழுத்தமும் உண்டாகும்.

முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் பகுதி இரண்டுமே ஆரோக்கியமானது தான். ஆனால், இதை யார் யார் எவ்வளவு அளவு எடுத்து கொள்ள வேண்டும் என்பதிலே இதன் பாதிப்பும் நன்மையும் உள்ளது.

குறிப்பு – உடல் எடை குறைப்போர், இதய பாதிப்பு கொண்டோர் முட்டையின் மஞ்சள் கருவை தவிர்க்கலாம். அதே போன்று ஒவ்வாமை, சிறுநீரக பிரச்சினை கொண்டோர் வெள்ளை பகுதியை தவிர்ப்பது நல்லது.

Previous articleஅதிகமா பொடுகுத் தொல்லை இருக்கா! இதோ சூப்பர் டிப்ஸ்!
Next articleமலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமா! ஆமணக்கு எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க!