முகம் பள பளன்னு ஜொலிக்க வேணுமா! தக்காளியை இப்படி யூஸ் பண்ணினா ஒரு வாரம் போதும்!

0

இங்கு சரும கருமையைப் போக்க சமையலறையில் உள்ள தக்காளியைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என கொடுக்கப்பட்டுள்ளது.

வெயில் அதிகம் கொளுத்துவதால், பலரது சரும நிறமும் கருமையாகி இருக்கும். இப்படி கருமையான சருமத்தை வெள்ளையாக்க எத்தனையோ க்ரீம்கள், லோசன்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், அவை தற்காலிக பலனைத் தருவதோடு, சரும செல்கள் ஆரோக்கியத்தை தான் பாதிக்கும்.

ஆனால் நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும கருமை நீங்குவதோடு, சரும செல்களும் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக தக்காளியைக் கொண்டு சருமத்திற்கு பராமரித்து கொடுப்பது, இருப்பதிலேயே மிகவும் அற்புதமான வழியாகும். இங்கு சரும கருமையைப் போக்க சமையலறையில் உள்ள தக்காளியைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என கொடுக்கப்பட்டுள்ளது.

தக்காளி மற்றும் தேன்
ஒரு தக்காளியை அரைத்து, அத்துடன் 2 ஸ்பூன் தேன் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

தக்காளி மற்றும் அவகேடோ
1 தக்காளியை கூழ் போன்று அரைத்து, அத்துடன் 1 அவகேடோ பழத்தை மசித்து சேர்த்து நன்கு கலந்து, முகத்திற்கு தினமும் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வர, சரும கருமை நீங்குவதோடு, வறட்சியும் நீங்கும்.

தக்காளி மற்றும் ஆலிவ் ஆயில்
ஒரு தக்காளி கூழுடன், 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில், 1 ஸ்பூன் ஜொஜோபா ஆயில் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகம், கழுத்து போன்ற பகுதிகளில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும்.

தக்காளி மற்றும் தயிர்
1 தக்காளியை அரைத்து, அதில் சிறிது தயிர், 1 ஸ்பூன் தேன் மற்றும் 1/2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சரும நிறம் மேம்படுவதைக் காணலாம்.

தக்காளி மற்றும் ஓட்ஸ்
ஒரு தக்காளி கூழுடன், 1 ஸ்பூன் ஓட்ஸ் பவுடர், 1 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

தக்காளி மற்றும் கிவி
1 தக்காளி மற்றும் பாதி கிவி பழத்தை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, அத்துடன் 1 ஸ்பூன் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

தக்காளி மற்றும் கற்றாழை
1 தக்காளியை அரைத்து கூழ் எடுத்து, அத்துடன் 1 ஸ்பூன் கற்றாழை ஜெல், 1 ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநகத்தால் உங்கள் உடலில் மேற்பகுதியில் சொரண்டினால் வெள்ளையாக தெரிகின்றதா!
Next articleவாத நோயை போக்க தழுதாழை மூலிகையை மிதமான சூட்டில் இப்படி பயன்படுத்துங்க!