மாமியாரை மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்த மருமகன்!

0

மகாராஷ்டிராவில் நபர் ஒருவர் தனது மாமியாரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாஷ்டிர மாநிலம் தானேவை சேர்ந்தவர் அன்குஷ் பத்தி(32). இவருக்கு ஒரு மனைவி இருக்கிறார். அந்த பெண்ணால் வாய் பேசவும் முடியாது, காதும் கேட்காது. இதனால் அன்குஷ் அவ்வப்போது மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றும் அன்குஷ் மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். அவரை சரமாரியாக அடித்தும் துன்புறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த அன்குஷின் மாமியார், தனது மகள் தாக்கப்படுதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து அவர் அன்குஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பதிலுக்கு அன்குஷும் தனது மாமியாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் அன்குஷ் தனது மாமியாரை முதல் மாடியில் இருந்து தள்ளிவிட்டார். இதில் கீழே விழுந்த அவரது மாமியார் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியானார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸார் மாமியாரை கொலை செய்த குற்றத்திற்காக அன்குஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு நிச்சயதார்த்தம்! காதலித்தவரை மணம் முடிக்கிறார்!
Next articleசச்சின் மீது சர்ச்சையை கிளப்பியுள்ள நடிகை ஸ்ரீரெட்டி! ரசிகர்கள் உச்சக்கட்ட கோபத்தில்!