மாதவிடாய் பிரச்சினையா? மனதை தளரவிடாதீர்கள் !

0

பெண்களின் மன உளைச்சலை அதிகரிப்பதில் மாதவிடாய்க்கு முக்கிய பங்குண்டு. சரியான நேரத்தில் ரெகுலரான சுழற்சியாக இருந்தால் பிரச்சினையில்லை. ஆனால் முறையற்ற மாதவிடாய் என்றால் சிக்கல்தான். சரியான உணவுபழக்கமின்மை, மன அழுத்தம், உடல்நலக் கோளாறு, மாத்திரை உட்கொள்வது போன்றவைகளினாலும் மாதவிலக்கு சுழற்சியில் சிக்கல் ஏற்படும். எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட பாட்டி வைத்தியத்தை பின்பற்றி பாருங்களேன்.

உடல் உஷ்ணம் அதிகமாகும்

மாதவிடாய் சிக்கல் உள்ளவர்கள் பப்பாளிப்பழம், திராட்சை, அத்திப்பழம் ஆகியவற்றை சாப்பிடலாம். இது உடலில் உஷ்ணத்தை அதிகரிப்பதோடு மாதவிடாய் சுழற்சியை ரெகுலராக்கும்.

எள் மிட்டாய்

எள் மிகச்சிறந்த மருந்தாகும். பீரியட்ஸ் பிரச்சினை உள்ளவர்கள் எள்ளில் செய்த உணவுகள், எள் மிட்டாய் போன்றவைகளை சாப்பிடலாம்.

மூச்சுப் பயிற்சி

மாதவிடாய் சிக்கல் உள்ளவர்கள் மூச்சுப் பயிற்சி மேற்கொண்டால் மன அழுத்தம் நீங்கி குறிப்பிட்ட சுழற்றிசியில் மாதவிடாய் வரும்.

மாதவிடாய் சிக்கல் தீர

பெருந்துத்தி இலை – 5 எடுத்து, அதோட மிளகு 5 சேர்த்து காலையில வெறும் வயிற்றில் மென்று சாப்பிடவேண்டும். மூன்று முதல் ஐந்துநாள் சாப்பிட ஒழுங்கான மாதவிடாய் வரும்.

இதற்கு மாவிலிங்கப்பட்டையும் நல்ல மருந்து தான். பட்டையை மையா அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து காலையில வெறும் வயிற்றில் சாப்பிட தாமதமான மாதவிடாய் தடையில்லாம வரும்.

சதக்குப்பை 50 கிராம் எடுத்து பொன்வறுவலா வறுத்து பொடியாக்கி, 3 பாகமாக்கி வைத்துக்கொள்ளவேண்டும். ஒரு பாகத்தை இரண்டாக பிரித்து, காலை, மாலை சாப்பிடவேண்டும். கூடவே, பனைவெல்லம் கொஞ்சம் சேர்த்துக்கணும். இப்பிடி மூணுநாள் சாப்பிட்டாலே வராத மாதவிடாய் சிக்கல் தீரும்.

கருஞ்சீரகம் 25 கிராம் எடுத்து பொன் வறுவலா வறுத்து பொடியாக்கி, பனைவெல்லம் சேர்த்து காலை, மாலை சாப்பிட மாதவிடாய்க் கோளாறு தீரும்.

கல்யாணமுருங்கை இலை

கல்யாணமுருங்கை மாதவிடாய்க் கோளாறுக்கு கைகண்ட மருந்து. கல்யாணமுருங்கை இலைச்சாறு 10 மில்லி எடுத்து, காலையில வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா, மாசக்கணக்குல வராத மாதவிடாய் வரும்.

வல்லாரை இலை சூரணம் கால் ஸ்பூன் எடுத்து, நெய் விட்டு கலந்து சாப்பிட வேண்டும். இதனால் மாதக்கணக்கில் வராத மாதவிடாய் ஒழுங்கா வரும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமுக்கிய அம்சங்களை: தாம்-பத்ய உறவில் கூறும் வழிமுறை?
Next articleஇந்த பூவ சாப்பிட்டா விறைப்புத் தன்மையும் விந் து எண்ணிக்கையும் அதிகமாகுமாம்.