இந்த பூவ சாப்பிட்டா விறைப்புத் தன்மையும் விந் து எண்ணிக்கையும் அதிகமாகுமாம்.

0

இந்த பூவ சாப்பிட்டா விறைப்புத் தன்மையும் விந்து எண்ணிக்கையும் அதிகமாகுமாம்.

‘டெய்ஸி’ பூ வகையை சேர்ந்த மலர்தான் பாரகிராஸ் ஆகும். எலெக்ட்ரிக் டெய்ஸி என்றும் இதை அழைப்பர். வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் இந்த மூலிகை பூவின் அறிவியல் பெயர் அக்மெலா ஒலரேஸியா என்பதாகும். இது ஆஸ்ட்ரேஸி என்ற மலர் குடும்பத்தை சேர்ந்தது. பல்வலி செடி, டிங்புளவர் என்றெல்லாம் கூட இதை அழைக்கின்றனர்.

பல் வலியைத் தீர்க்கின்ற பாரகிராஸ் மலரைப் பற்றியும் அதை எப்படி சாப்பிட வேண்டும், என்ன பக்க விளைவும் உண்டாகும் என்பது தான் இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம்.

மருத்துவ குணங்கள்

செல் சமிக்ஞை பாதை செயல்பாடு மற்றும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பு வினை இவற்றிற்கு காரணமான ஃப்ளவனாய்டு மற்றும் பிசின், டானின்கள், கொலைன், பைட்டோஸ்டிரால்கள் போன்ற செயல்தன்மை மிக்க கூட்டுப்பொருள்கள் இதில் காணப்படுகின்றன.

உடல் வலியை போக்கக்கூடிய மற்றும் அழற்சி ஏற்படாமல் தடுக்கக்கூடிய மருத்துவ குணங்கள் இந்த மலருக்கு இருக்கிறபடியால் பூஞ்சை தொற்று, மூட்டு மற்றும் தசை அழற்சி, சிறுகுடல் பிரச்னை ஆகியவற்றுக்கு சிகிச்சையளிக்க இது பயன்படுகிறது.

பல்வேறு பயன்கள்

இச்செடியின் இலைகளும் மலர்களும் சமையல் மற்றும் மருத்துவ தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. இதன் மலரிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், உணவு பொருள்களுக்கு சுவையூட்ட உதவுகிறது. முழு பாரகிராஸ் செடியையும் நிழலில் உலர வைத்து, அரைத்து பல்வலிக்கான பொடி தயாரிக்கப்படுகிறது.

பாரகிராஸூம் ஆரோக்கியமும்

விறைப்புத்தன்மை குறைபாடு: பாரகிராஸ் தாவரத்திற்கு பிறப்புறுப்பில் அதிக இரத்த ஓட்டத்தை தூண்டும் பண்பு உண்டு. அஸ்வகந்தாவுடன் பாரகிராஸ் தாவரத்தை கலந்து பயன்படுத்தினால் ஆண்குறி விறைப்புத் தன்மை குறைபாட்டுக்கு நல்ல சிகிச்சையாக அமையும்.

தொண்டை வலி:

பாரஞ்ஜைடஸ் என்னும் தொண்டை வலி மற்றும் எரிச்சலை பல்வலிக்கான தாவரமான பாரகிராஸ் எளிதில் குணப்படுத்தும். இத்தாவரத்தின் வேரை நீரில் கொதிக்கவைத்து, வாய் கொப்பளித்தால் தொண்டை வலி குணமாகும். மூச்சுக்குழலை விரிவடையச் செய்து, மூச்சு திணறலை தடுக்கும்.

பாலியல் வேட்கை:

பாலியல் வேட்கையை தூண்டக்கூடிய அஃப்ரிடிஸியாக் என்ற பொருளும் ஆண் உயிரணுக்கள் உற்பத்தியான ஸ்பெர்மெட்டோஜெனிக் செயல்பாடுகளை தூண்டும் பண்பும் இதற்கு உண்டு. டெஸ்டோஸ்டீரான் என்னும் ஆண்மைதன்மைக்கான ஹார்மோன் உற்பத்தியை பாரகிராஸ் அதிகரிப்பதன் மூலம் பாலுறவு நாட்டம் கூடுவதோடு விந்தணு முதிர்தலை பெருக்கி கருவுறுவுதற்கான வாய்ப்பினை அதிகரிக்க உதவுகிறது.

சாதாரண சளி:

இத்தாவரத்தின் கிருமி எதிர்ப்பு ஆற்றல் மூக்கடைப்பு மற்றும் சாதாரண சளிக்கான சிகிச்சையில் உதவுகிறது. இதன் வேரை பொடியாக்கி கறுமிளகுடன் சேர்த்து ஆரம்ப நிலை சளியை குணப்படுத்தலாம்.

பல்வலி:

பல்வலி மற்றும் வாயில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் சிகிச்சையளிக்க உதவுவதால் இது பல்வலி தாவரம் என்று அழைக்கப்படுகிறது. பாரகிராஸ் தாவரத்தின் வேரை பொடியாக்கி அதனுடன் கற்பூரத்தை கலந்து பயன்படுத்தினால் நன்கு குணம் கிடைக்கும்.

பக்கவாதம்:

பாரகிராஸ் தூண்டும் பண்பு கொண்டது. நரம்புகளை அமைதிப்படுத்தும் நெர்வின் என்ற பொருளும் இதில் காணப்படுவதால், பக்கவாதத்திலிருந்து மீள்வதற்கு நரம்புகளை பலப்படுத்தி உதவுகிறது. இத்தாவரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு பக்கவாதத்திலிருந்து மீள்வதற்கான சிகிச்சையில் பயன்படுகிறது.

வலிப்பு நோய்:

நரம்பு தொடர்பான வலிப்பு நோயை சமாளிப்பதற்கு பாரகிராஸ் தாவரத்திலுள்ள நெர்வின் உதவுகிறது. நியூரால்ஜியா என்ற முகநரம்பு வலியை போக்குவதற்கு நரம்புகளை தளர்த்தி, அழுத்தத்தை போக்கி, வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

தலைவலி:

இது வலி நிவாரணி. ஆகவே, இதை பசையாக்கி நெற்றியில் பூசினால் தலைவலியிலிருந்து சுகம் கிடைக்கும்.

செரிமானம்:

பித்தநீரையும் எச்சிலையும் சுரக்கக்செய்யும் பண்பு பாரகிராஸ் தாவரத்தின் வேருக்கு உண்டு. ஆகவே, செரிமான கோளாறுகளை குணப்படுத்த உதவுகிறது.

மூட்டுப்பாதிப்பு:

மூட்டுகளில் யூரிக் அமிலம் தங்குவதை தடுக்கக்கூடிய ஆல்கலாய்டுகள் மற்றும் ஃப்ளவனாய்டுகள் பாரகிராஸ் தாவரத்தில் உள்ளது. இதனால் மூட்டுகளில் இரத்த ஓட்டம் அதிகமாகிறது. உடல் முழுவதும் அழற்சி ஏற்படாமலும் காக்கிறது.

செரிமானத்தை சீராக்குவதற்கும், திக்குவாய் பிரச்னைக்கு சிகிச்சையளிக்கவும், காற்று மற்றும் நீரினால் வரக்கூடிய நோய்களை தடுப்பதற்கும், சீரற்ற மாதவிடாய் சுழற்சியை சீராக்கவும், குடல் புழுக்களை வெளியேற்றவும் பாரகிராஸ் பயன்படுகிறது.

பாரகிராஸ் தாவரத்தின் பயன்கள்

பாரகிராஸ் தாவரத்தின் இலைகள் சாலட்டுகளுக்கு தனித்துவமான சுவையை தருவதற்கு பயன்படுகிறது. இத்தாவரத்தின் இலையை சமைத்து கீரைபோல் உண்ணலாம். இதன் அரும்புகள் புகையிலைக்கு சுவையூட்ட உதவுகின்றன. இத்தாவரத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சூயிங்கம் மற்றும் உணவு பொருள்களுக்கு சுவையூட்ட உதவுகிறது. இதன் மலர்கள் மணமூட்டியாக பயன்படுத்தப்படுகிறது.

எவ்வளவு சாப்பிட வேண்டும்?

பல்வலிக்கு, பாரகிராஸ் இலை மற்றும் மலர்களை பயன்படுத்தி சாறு தயாரித்து அதில் இரண்டு சொட்டு வாயைச் சுற்றி விட்டு சில நிமிடங்கள் கழித்து உமிழ்ந்து விட வேண்டும்.

தொண்டை வலிக்கு, 250 கிராம் பாரகிராஸ் மலரை நீரில் போட்டு பத்து நிமிடம் கொதிக்கவிடவும். அதை குளிரவிட்டு வாய் கொப்பளித்தால் வலி குறையும்.

பக்க விளைவுகள்

பாரகிராஸ் தாவரத்தின் பொருள்களை பயன்படுத்தும்போது சிறிய பக்கவிளைவுகள் இருக்கக்கூடும். அதிகப்படியாக உபயோகித்தால் மலம் இளகிவிடும். ஆகவே, வயிறு கழியலாம்.

பாரகிராஸ் வடிசாறு (சூப்)

தேவையானவை:

இறால் – 200 கிராம்

கசாவா எனும் வேர்க்கிழக்கு அல்லது மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கப்பட்ட மஞ்சள் சாஸ் – 3 கப்

வெள்ளைப்பூண்டு பல் – 1 (நறுக்கியது)

பாரகிராஸ் இலைகள் – ஒரு கொத்து

தண்ணீர் – 1½ கப்

சிவப்பு குடமிளகாய் – 2

உப்பு – சிறிதளவு

ஜவ்வரிசி மாவு – 6 மேசைக்கரண்டி

தயாரிக்கும் முறை

இறாலை குளிர்ந்த நீரில் எட்டு மணி நேரம் ஊற வைக்கவேண்டும். இடையில் இருமுறை நீரை மாற்றவேண்டும். வெள்ளைப் பூண்டு, மஞ்சள் சாஸ், தண்ணீர், சிவப்பு குடமிளகாய் மற்றும் உப்பு ஆகியவற்றை வாணலியில் எடுத்து 10 நிமிடம் அதிக ஜூவாலையில் கொதிக்க வைக்கவும். பாரகிராஸ் இலைகளை தனியே நீரில் போட்டு நன்கு இளகும்படி 10 நிமிடம் சூடாக்கவும். பின்பு தனியே வைத்துவிடவும். இன்னொரு பாத்திரத்தில் ஜவ்வரிசி மாவுடன் நீர் சேர்த்து நன்கு கலக்கி ஓரளவு கட்டியாகும்படி 10 நிமிடங்கள் சூடாக்கவும். இறால் கலவை, ஜவ்வரிசி கலவை மற்றும் பாரகிராஸ் இலைகள் அனைத்து ஒரே பாத்திரத்தில் இட்டு நன்கு கலக்கி, சூடாக பரிமாறவும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமாதவிடாய் பிரச்சினையா? மனதை தளரவிடாதீர்கள் !
Next articleஉங்களுக்கு இந்த பிரச்சனை உள்ளதா? தாமதப்படுத்தாதீர்கள் தள்ளிப்போடக்கூடாத தாம்பத்திய சிகிச்சைக்கான விளக்கம் !