Home Jaffna News மாணவர் ஒருவர் மீது சரமாரி தாக்குதல்!

மாணவர் ஒருவர் மீது சரமாரி தாக்குதல்!

0
499

இலங்கை தொழிற்பயிற்சி கல்லூரி மாணவர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் தாக்குதலிற்குள்ளான மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மின்னேரியாவில் உள்ள இலங்கை தொழிற்பயிற்சி கல்லூரியிலேயே குறித்த மாணவர் மீது இருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ள நிலையில் மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவர் மீது மாணவ தலைவர் உட்பட மற்றும் ஒருவர் இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த மாணவருக்கும் மாணவ தலைவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கும் எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலங்கை தொழிற்பயிற்சி கல்லூரியின் உதவி பணிப்பாளர் தெரிவித்துள்ளர்.

Previous articleஉணவு பரிமாறிய தாயின் கழுத்தை நெரித்து கொன்ற மகன்! இலங்கையில் என்ன நடக்கின்றது?
Next articleகழுத்தை நெரித்தே கொலை செய்தேன்; கைது செய்தவரின் பரபரப்பு வாக்குமூலம்!