உணவு பரிமாறிக் கொண்டிருந்த தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மூத்த மகன் தாயாரைக் கழுத்து நெரித்துக் கொலை செய்துள்ள கொடூர சம்பவம் ஒன்று தம்புள்ளை வீரகெடிய, ஹகுருவெல பகுதியில் நடந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவமு :- தாயின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக வீரகெடிய பொலிஸாரிற்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் உயிரிழந்த பெண்ணின் மூத்த மகனை (வயது 33) கைது செய்துள்ளனர்.
உணவு பரிமாறிக்கொண்டிருக்கும் போது குறித்த பெண்ணின் மூத்த மகனால் தாக்கப்பட்டு பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்று உயிரிழந்த பெண்ணின் இளைய மகன் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
காணிப்பிரச்சினை காரணமாக குறித்த கொலை நடந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




