மழைக்காலத்தில் இந்த 6 உணவுகளும் கட்டாயம் உங்கள் டயட்டில் சேர்க்க வேண்டும்!

0

மழைக்காலத்தில் மழையோடு வியாதிகளும் வருவதற்கான் அறிகுறியாகும். அதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து உடலை பலவீனப்படுத்தும். கிருமிகளின் தாக்கம் பெருகும்.

இந்த காலக்கட்டத்தில் நீங்கள் சாப்பிடும் உணவுகளும் உங்களுக்கு பாதுகாப்பு வளையத்தை தந்துவிடும். அவ்வாறான எத்தகைய உணவுகளை நீங்கள் சாப்பிட வேண்டுமென தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.

பேரிக்காய் :
அதிக விட்டமின் சி நிறைந்த பேரிக்காய் மழைக்காலத்தில் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு மண்டலம் பலப்படும். அதிக நார்சத்து கொண்ட்டது. மழைக்காலத்தில் வயிறும் வயிற்றுப் பிரச்சனைகளை போக்கும்.

பூண்டு :
மிக முக்கியமான உணவு இது. பூண்டு உடலுக்கு சூட்டை தரும். கிருமிகளை கொல்லும். நோய் எதிர்ப்பு செல்களை பலப்படுத்தும். ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்.

இஞ்சி :
இஞ்சி மழைக்காலத்தில் வரும் வயிற்றுப் போக்கு, அஜீரணம் ஆகிய்வற்றை தடுக்கும். உடலுக்கு வெப்பத்தை தரும். வளர்சிதை மாடர்த்தை தூண்டும். சுறுசுறுப்பாய் வைத்துக் கொள்ளும்.

ஆப்பிள் :
ஆப்பிளில் அதிக நார்சத்தும் விட்டமின் ஏ வும் இருக்கிறது. மலச்சிக்கலை குணப்படுத்தும். நோயை விரட்டும். உடலுக்கு ரத்தஓட்டத்தை அதிகப்படுத்தும்.

மாதுளை :
மாதுளை ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். நோய்களை தடுக்கும். குறிப்பாக மழைக்கால நோய்களான காய்ச்சல் ஜலதோஷம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும்.

மிளகு :
மிளகில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. காய்ச்சல், இருமல், ஜலதோஷம் ஆகிய்வற்றை நெருங்க விடாது. கிருமிகளை அழித்துவிடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதாங்க முடியாத பல்வலியா! இந்த ஒரு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!
Next articleஒரே வாரத்தில் 10 கிலோ உடல் எடை குறைக்க வேண்டுமா? இந்த சூப் குடிங்க!