மருதாணியின் பலன்கள்!

0

மருதாணி கைகளுக்கு வெறும் அழகையும், நிறத்தையும் மட்டும் தருவது இல்லை. பல இயற்கை மருத்துவக் குணங்களும் மருதாணிக்கு உண்டு.

இராவணனால் கடத்தப்பட்ட சீதை இராமனை நினைத்து வருந்தி இருந்தபோது அங்கிருந்த மருதாணி மரங்களின் குளிர்ந்த காற்று சீதையின் மனத்திற்கு கவலைகளை போக்கி, இதத்தினைத் தந்தது.

மணமுடிக்கும் போது பெண்கள் மருதாணி இட்டுக் கொண்டால் அவர்கள் வாழ்வில் சகல இன்பத்தினையும் பெறுவர் என சீதை வரம் கொடுத்தார்.

இதனால் தான் திருமணத்தின் போது மருதாணி இடுவது முக்கிய சடங்காக நடத்தப்படுகிறது.

மருத்துவ பயன்கள்
மருதாணி வைப்பதால் உடல்சூடு குறையும். நகத்தில் உள்ள கிருமிகள் அழிந்து நகச்சுத்து வருவது தடுக்கப்படுகிறது.

அடிக்கடி மருதாணி இடுவதால் மனநோய் ஏற்படுவது குறையும். நாள்பட்ட புண்களை ஆற்றும்.

மருதாணியின் பொடியினை அரைத்து தேங்காய் எண்ணெயுடன் தலைக்கு தேய்த்து வர முடி நன்கு வளரும், இளநரையினைப் போக்கும்.

உள்ளங்காலில் வரும் ஆணிக்கு வசம்பு, மஞ்சள், கற்பூரம் சேர்த்து அரைத்துக் தொடர்ந்து ஆணி உள்ள இடத்தில் கட்டினால் ஒரு வாரத்தில் சரியாகும்.

மாப்பில்லி சூனியம், விருத்தாண்ட பேய் பூதம், மேவும் என அகத்தியர் கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமைகளில் மருதாணி இலை புகைப்போடுவதால் துஷ்டத்தேவதைகள் விலகும்.

மருதாணியின் பூவினை துணியில் கட்டி தூங்கும் போது தலைக்கு மேல் வைத்தால் தூக்கமின்மைப் பிரச்சனைகள் தீரும்.

இலைகளின் வடிசாறு அல்லது கசாயம் வயிற்றுப்போக்கு மற்றும் சீதபேதியினை கட்டுப்படுத்தும்.

கால் எரிச்சலைத் தடுக்க பசையாக உதவும். மருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பைச் சேர்த்து அரைத்து பூசி வர விரைவில் கருந்தேமல் மறையும்.

சிலருக்கு மருதாணி இட்டுக் கொண்டால் சளி பிடித்து விடும். இதற்கு மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே 7 அல்லது 8 நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

கால் எரிச்சலைத் தடுக்க இலைகளை அரைத்து பசையாக போடலாம்.

ஆனால், தற்போது பாக்கெட்டுகளில் விற்கப்படும் கோன்களில் ரசாயனம் நிறைந்துள்ளது. இவற்றைத் தவிர்த்து இயற்கையான முறையில் மருதாணியினை அரைத்துப் பயன்படுத்த வேண்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபித்தப்பை கற்களை கரைக்க அருமையான தீர்வு! வெறும் 7 நாட்கள் போதும்!
Next articleவயிறு தட்டையாக இருக்க வேண்டுமா! இதோ சூப்பர் டிப்ஸ்!