மரண போராட்டம்! 1400 பயணிகளுடன் தள்ளாடிய கப்பலுக்குள் நடந்தது என்ன! பயணியின் திக் திக் நிமிடங்கள்!

0

நார்வேயில் புயல் தாக்கியதில் இயந்திரம் பழுதாகி கடலில் நிறுத்தப்பட்டிருந்த வைகிங் ஸ்கை என்ற சொகுசுக் கப்பல் பத்திரமாக துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

வைகிங் ஸ்கை என்ற பெயர் கொண்ட சொகுசு கப்பல் 1,300 பயணிகளுடன் நார்வேயில் இருந்து புறப்பட்டது.

அந்த கப்பல் புறப்பட்ட இடத்தில் இருந்து 38 நாட் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த போது திடீரென வீசிய சூறாவளி காற்றிலும், பேரலையிலும் சிக்கி தள்ளாடியது.

இதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மற்றும் மீன்பிடிப் படகுகள் மூலம் கப்பலில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கடல் சீற்றம் குறைந்ததைத் தொடர்ந்து இழுவைக் கப்பல் மூலம் வைகிங் ஸ்கை கப்பல் மோல்டே என்ற துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சொகுசு கப்பலில் பயணம் செய்த அமெரிக்காவை சேர்ந்த தம்பதியினர், தாங்கள் எதிர்கொண்ட திகில் அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர்.

12 நாட்கள் சொகுசு பயணமாக புறப்பட்ட இந்த கப்பலில் நாங்களும் இருந்தோம். கப்பல் நார்வே கடலை சுற்றிக்கொண்டிருந்தபோது அது மூழ்கிவிடுமோ என நாங்கள் அஞ்சினோம். இது டைட்டானிக் கப்பல் மூழ்கிய சம்பவத்தை நினைவுபடுத்தியது.

அதுபோன்று எங்களுக்கு நடந்துவிடுமோ என அஞ்சினோம். கப்பல் முன்னும் பின்னும் நகர்ந்துகொண்டிருந்த காரணத்தால் அது பயணிக்கிறது என நாங்கள் நம்பினோம், ஆனால் கடல் சீற்றத்தில் எழுந்த அலையின் காரணமாக பொருட்கள் தூக்கியெறியப்பட்டன.

கப்பலில் இருந்த உணவகத்தின் வழியாக தண்ணீர் உள்ளே வர ஆரம்பித்தது.கதிரைகள் தூக்கியெறியப்பட்டதால் எனது மனைவி காயமடைந்தாள். எங்கள் கால்களில் பட்டு காயம் ஏற்பட்டதையடுத்து கப்பலில் இருந்து மீட்கப்பட்ட முதல் பயணிகள் நாங்கள் தான்.

இதில், உயிர்தப்பியது எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. எதிர்காலத்தில் நாங்கள் இலவச கப்பலில் வழங்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Previous articleமுன்னணி நடிகை தீபிகா படுகோனேவா இது!- முகத்தில் என்ன ஆனது, அதிர்ச்சியான ரசிகர்கள்!
Next articleமீண்டும் நெஞ்சைப் பிழியும் சோகம்! உடல் சிதறிப் பலியான சிறுவர்கள்!