மரண தண்டனையிலிருந்து தப்பிய சிறுவன்! சவுதி அரசு முக்கிய முடிவு!

0

சவுதி அரேபியா அரசுக்கு எதிராக நண்பர்களை திரட்டி போராடியதாக கூறி மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட இளைஞரை விடுவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியாவில் சிறுபான்மையினரான ஷியா பிரிவினரை சேர்ந்த 13 வயது சிறுவன் Murtaja Qureiris, அரசுக்கு எதிராக நண்பர்களை திரட்டி போராடியதாக கூறி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் முர்தாஜாவுக்கு மரண தண்டனை விதித்து ஷரியா நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விவகாரம் சர்வதேச அளவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது முர்தாஜா மீதான மரண தண்டனையை ரத்து செய்துள்ளதாகவும், 2022 ஆம் ஆண்டு அவர் விடுவிக்கப்படுவார் எனவும் சவுதி அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முர்தாஜா கடந்த 2014 ஆம் ஆண்டு, தமது 13-வது வயதில் அரசுக்கு எதிராக ஆளைத் திரட்டி போராடியதாக கூறி கைது செய்யப்பட்டார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசொந்த ஊரை விட்டு வெளியூரில் தங்கி படிக்கும் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கான முக்கிய பதிவு!
Next articleஇணையத்தில் ட்ரெண்ட் ஆகும் காஜல் அகர்வாலின் கவர்ச்சிகரமான புதிய விளம்பரம்! நீங்களே பாருங்கள்!