Home Jaffna News மனைவியுடன் இறுதியாக தற்கொலையாளி கதைத்தது என்ன? வெளியானது தகவல் !

மனைவியுடன் இறுதியாக தற்கொலையாளி கதைத்தது என்ன? வெளியானது தகவல் !

0
1350

உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டின் பல பாகங்களில் தௌஹீத் ஜமா அத் அமைப்பின் பயங்கரவாத தாக்குதலில் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

நாட்டையே உலுக்கிய இந்த பயங்கவாத தாக்குதல் தொடர்பான புலன் விசாரணைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், தாக்குதலின் பின்ணி, தாக்குதல்தாரிகள் பற்றி விபரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இந்த தாக்குதலிற்கான வெடிகுண்டுகள் வெல்லம்பிட்டிய பகுதி தொழிற்சாலையொன்றில் தயாரிக்கப்பட்டுள்ளன.

செப்பு தொழிற்சாலையென்ற பெயரில் இயங்கிய அந்த தொழிற்சாலையில், இரகசியமாக தற்கொலை குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இன்ஷாப் அஹமட் என்ற நபரிற்கு சொந்தமானதே இந்த செப்புத் தொழிற்சாலை. அவரும் தற்கொலை குண்டுதாரியாக மரணமடைந்து விட்டார்.

மிகப்பெரிய செப்பு தொழிற்சாலையான அங்கு உள்ளூர் வெளிநாட்டு தொழிலாளர்கள் பலர் பணிபுரிகிறார்கள்.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் பாகிஸ்தானியர் 9, இந்தியர் 3 பேர் கைதாகியுள்ளனர்.

தொழிற்சாலையின் முகாமையாளர், மேற்பார்வையாளர், தொழில்நுட்பவியலாளர் இவர்களில் உள்ளடக்கம்.

இன்ஷாப் அஹமட் தொழிற்சாலைக்கு தேவையான பொருட்களை வாங்க அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்று வருபவர்.

தற்கொலை தாக்குதலிற்கு செல்வதற்கு முன்னர் கடந்த வெள்ளிக்கிழமை வெளிநாட்டு பயணம் செல்வதாக மனைவியிடம் கூறியிருக்கிறார்.

ஆபிரிக்க நாடான சாம்பியாவற்கு பொருட்கள் கொள்வனவு செய்ய செல்வதாக கூறியிருக்கிறார்.

அவர்களின் உறவினர்களின் தகவல்படி- வெள்ளிக்கிழமை மாலை 6.50 மணிக்கு விமான நிலையத்தில் மனைவி கொண்டு சென்று விட்டுள்ளார்.

அப்போது வழக்கத்திற்கு மாறாக, மனைவியின் கழுத்தை இறுக அணைத்து விடைபெற்றுள்ளார் என அங்கிருந்த உறவினர்கள் இப்பொழுது நினைவுகூறுகிறார்கள்.

தாக்குதல் தினமன்று காலையில் 7.30 மணியளவில், தொலைபேசியில் மனைவியை தொடர்பு கொண்ட அந்த நபர், சாம்பியாவிலிருந்து பேசுவதாக குறிப்பிட்டு, வந்த வியாபார அலுவல்கள் வெற்றியாக முடிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மனைவியுடன் பேசி சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னர் அவர் தற்கொலை தாக்குதலை நடத்தினார்.

Previous articleகொழும்பு ஹோட்டல் தற்கொலைதாரிகளின் புகைப்படம் வெளியானது! அதிரவைக்கும் பின்னணி!
Next articleஇரத்த ஆறு ஓடும் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என்ற ஹிஸ்புல்லாவின் கனவு நனவாகியுள்ளது – வியாழேந்திரன் !