Home Jaffna News கொழும்பு ஹோட்டல் தற்கொலைதாரிகளின் புகைப்படம் வெளியானது! அதிரவைக்கும் பின்னணி!

கொழும்பு ஹோட்டல் தற்கொலைதாரிகளின் புகைப்படம் வெளியானது! அதிரவைக்கும் பின்னணி!

0
1485

இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களில் இரண்டு சகோதரர்களும் ஈடுபட்டதாக பிரித்தானிய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கொழும்பு ஷங்ரிலா விடுதியில் தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதிகள் இருவரும் சகோதரர்கள் என்று டெய்லி மெயில் ஊடகம் கூறுகிறது.

இதுதொடர்பான புகைப்படங்களும் காணொளியும் அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது.

இவர்கள் இருவரும் இன்ஷாப் இப்ராஹிம் மற்றும் இல்ஹாம் இப்ராஹீம் ஆகியோர் என பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

குறித்த இரு தீவிரவாதிகளும் கொழும்பில் நன்கு செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர்களென்று கூறப்பட்டுள்ளது.


குண்டுவெடிப்பதற்கு முன்னர் ஹோட்டல் மின்னுயர்த்தியினுள் ஒன்றாக இணையும் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொள்கின்றனர்.


பின்னர் ஹோட்டலின் உணவகத்தில் சென்றபின்னர் சுமார் நாற்பதுபேர் சூழ்ந்திருந்த அந்தப் பகுதியில் குண்டை வெடிக்கவைக்கிறார்கள்.


Previous articleஇலங்கை வெடிகுண்டு தாக்குதல் தொடர்பில் கைதான நபர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
Next articleமனைவியுடன் இறுதியாக தற்கொலையாளி கதைத்தது என்ன? வெளியானது தகவல் !